கீரை விவசாயம் எளிதானதே




 கீரை விவசாயம் எளிதானதே :


 மிக குறைவான இடத்தில கூட நிறைவான மகசூல் பெறலாம் . ஏக்கர் ஒன்றிருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.

1.விதைதனை சம அளவு மணலில் கலந்து  விதைக்க வேண்டும். மணலில் கலப்பது விதையை சீராக காற்றில் பரந்துவிடாமல் நிலத்தில் பரவலாய் விழ செய்யும் .
2. விதைப்புக்கு முன் ஏக்கர் ஒன்றிற்கு 5 டன் தொழு உரம்  இட்டு நன்றாக உழுது  நிலம் தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும் .
3.காலை  அல்லது மாலை நேரத்தில் விதைப்பது சாலவும் சிறந்தது .
4.விதைத்த பின்னர் நிலத்தை நன்றாக கிளறி நீர் பாய்ச்சுதல் வேண்டும் .
5. விதைத்த 4 அல்லது 5 நாட்களில் முளைப்பு தெரியும்.
6. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு  முறை நீர் விட்டால் போதுமானது .
7. பன்னிரண்டு முதல் பதினான்கு நாட்களில் மேலுரமாய் யூரியா  மற்றும் இயற்கை விவசாயம் செய்பவர்கள் சாணம்  மற்றும் கோமியத்தை நீர் பாய்ச்சும் போது  கலந்து விடலாம் .
8. இருபத்தியோராம் நாள்  அறுவடைக்கு தயார் ஆகி விடும் .
9. கிலோ விதைக்கு 1450 முதல் 1750 கட்டுகள் கிடைக்கும்.


நன்றி:தோட்டகலை விவசாயம் /FB

 https://www.facebook.com/TottakkalaiVivacayam

Comments

Popular Posts