குருகு நாட்டுக்கோழி


சின்னச்சின்ன செய்திகள்: குருகு நாட்டுக்கோழி
ஆண்டுக்கு எண்பது முட்டையிடும் நாட்டுக்குருகு: நாட்டுக்கோழி இனங்களில் ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்ததில் பல அரிய தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கிறார் டாக்டர் சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஊட்டச்சத்துத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல். தாத்தையங்கார் பேட்டை பகுதியில் "குருகு' என்ற நாட்டுக்கோழி இனம் வளர்க்கப்படுகிறது. இதைக்
"
குறுவ', "குறுவை', "குருவன்' என்ற பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
ஆண்டுக்கு அதிகபட்சம் 80 முட்டைகள் வரை இடும். ஆனால் நாட்டு ரகத்தைச் சேர்ந்த மற்ற கோழிகள் 40 முட்டை வரைதான் இடும். குருகுக் கோழிகளுக்கு தாய்ப்பாசம் அதிகம்.எனவே குஞ்சுகளை பொன்போல பாதுகாக்கும். உதாரணமாக ஒருமுறை 10 முட்டைகள்அடைகாக்கிறது என்றால் அதில் 8 குஞ்சுகளை வளர்த்து ஆளாக்கிவிடும். இதனால்தான் அந்தப் பகுதி விவசாயிகள் குருகு இனத்தை விரும்பி வளர்க்கிறார்கள்.தாத்தையங்கார் பேட்டையின் அருகே உள்ள பவித்திரம் பகுதியில்நடக்கும் சந்தையில் இந்த இனக்கோழி விற்பனைக்கு கிடைக்கும். இந்தச் சந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறுகிறது.

Comments

  1. நண்பரே ... வணக்கம் .. "தாத்தையங்கார் பேட்டையின்" எந்த மாவட்டதை சேர்ந்த ஊர் ?
    நன்றி ,,

    ReplyDelete

Post a Comment

Popular Posts