கருப்பட்டி : சில சுவாசரசியமான தகவல்கள்

சந்துரு s /o  வெள்ளியங்கிரி  நாதன் .  இவர்  முகனூலில் ஒரு பதிவு இட்டு இருந்தார் .  கருப்பட்டி வெல்லம்  பற்றிய அணைத்து தகவல்களும் செய்முறை  நேர்த்திகள் கொடுத்திருந்தார். அவரிடம்  ஒப்புதல் பெற்று இப்பதிவினை வெளி இடுகிறேன். தெரியாத தகவல்கள்  பல உண்டு. அதில் இந்த கருப்பட்டி செய் முறையும் அடங்கும். பனை மரங்கள் வறட்சி பகுதிகளில்  அங்கு வாழும் எளியமக்களின் வாழ்வாதாரம் என்பதை புரிந்து கொண்டு பனை செல்வங்களை  கண்  மூடித்தனமாய்  அழிப்பதை நிறுத்தினால்  மக்களுக்கு எவ்வளவு நன்மை என்பதினை இதனை படித்து முடித்ததும் அறிவீர்கள்.

 முகநூல் பக்கத்தில் நடைபெற்ற உரையாடல்கள்  அப்படியே  தர பட்டுள்ளது .


ChandraSekaran Sonof PV Nathan Subash Krishnasamy // Thirunavukkarasu Rathinam//... ஆம் அய்யா.. இவ்வளவு பெரிய அளவில்தான் செய்கிறேம்.. இது எனனுடைய நண்பர் தோட்டத்து பனைமரத்தில் ஆள்வைத்து தெளுவு இறக்குகிறோம்..இறக்கிக் கொடுக்கும் நபரின் மனைவியும் , மகனும் அதை காய்ச்சி கருப்பட்டி செய்து கொடுக்கின்றனா்.கருப்பட்டி ஒவ்வொன்றும் 800 முதல் 1கிலோ 200 கிராம் வரை எடை வரும்.. ஏன்..எதற்கு.. எப்படி.. ? என்று கூறுகிறேன்.. பல்வேறு உபயோகங்களுக்கு உபயோகப்படுத்துவதால் பெரிய அளவில் இருந்தால்தான் சரியாக இருக்கும்.. சிறிய அளவில் இருந்தால் சில நாட்களிலேயே.. உள்பாகம்வரை காய்ந்து கெட்டியாகிவிடும்.. உபயோகிக்க சிரமமாக இருக்கும்... இந்தமாதிரி பெரிய அளவில் இருக்கும்போது நீண்ட நாட்களுக்கு உட்புறம் மென்மையாக இருக்கும்.. எங்கள் சிறுவயதிலிருந்து எங்கள்தோட்டத்திற்கு ஆட்கள் வந்து இந்த மாதிரிதான் காய்ச்சி கொடுப்பார்கள்.. நாங்கள் கருப்பட்டியை உபயோகப்படுத்த உடைக்க மாட்டோம் அரிவாள்மனை அல்லது கத்தியால் சீவித்தான் பயன்படுத்துவோம்.. பென்சில் சீவும் போது சுருள் சுருளாய் வருமே அதுபோல் பனங்கருப்பட்டியை சீவும்போதும் அழகாய் அடுக்கடுக்காய் வெண்ணை போல வரும்.. (1) அதை அப்படியே கொத்துமல்லி காப்பிக்கு போடுவோம்..(2) இனிப்பு பலகாரங்கள் , ஆப்பம், ஒப்புட்டு, பாயாசம், பனியாரம் போன்றவை செய்வதற்கு இதே சீவல்முறைதான்...(3) பெண்கள் பிரசவம் ஆனதிலிருந்து ஒருவாரத்திற்கு இந்த சுக்குகருப்பட்டியை இதேபோல்சீவி அதில் மிளகை பொடித்து போட்டு கொஞ்சம் பசு நெய் ஊற்றி லட்டுபோல் உருட்டி அரிசி சாதத்தில் போட்டும் அப்படியேவும்.. சாப்பிடுவார்கள் .. மேலும் வருத்து இடித்த எள்ளு பொடியை லட்டுடன் கலந்தும் சாப்பிடுவார்கள்...அப்படி சாப்பிடும் போது குழந்தை பிறந்தபின் கர்பப்பையின் உள்ளே மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி அல்லது வேறு ஏதாவது அசுத்தங்களின் மிச்ச மீதங்கள் அனைத்தையும் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும்..( இப்போது என் வருத்தம் என்னவென்றால் அம்பது ரூபாயிலே முடியவேண்டிய இந்த சமாசாரத்திற்கு அய்யாயிரம் செலவு பண்ணி ஆஸ்பத்திரியிலே டி அன்ட் சி பண்ணிட்டு அதுக்கப்புறம் ஆயிரம் ரண்டாயிரத்துக்கு மருந்து எழுதிக் கொடுப்பாங்க.. அதான் ஆயுதம் போட்டு கர்ப்பபைய சுத்தம் பண்ணியாச்சே.. அப்புறம் எதுக்கு மருந்து மாத்திரை ஊசின்னு புரியலே..)... (4) மாடு கன்னுப் போட்டவுடன் இதே சீவல்லே சில மருத்துவ செடி இலைகளையும் கலந்து மாட்டின் நாக்கை பிடித்து இழுத்து அதன் தொண்டைக்குள் போட்டிருவாங்க.. மாட்டின் கர்ப்பபையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நஞ்சுக் கொடி சுத்தமாக வெளியே வந்துவிடும்.. பிரசவத்திற்குபின் மாடு நஞ்சு போடாவிட்டால் இறந்துவிடும்..(5) பெண்கள் இந்த கருப்பட்டியை வாரம் ஒருமுறையாவது பயன்படுத்தி வரும் போது மாதவிடாய் சரியான நேரத்திலும் முழுமையாகவும் வெளியேறும்..(6) சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிடக்கூடிய ஒரே இனிப்பு இதுமட்டும்தான்..(7) அதெல்லாம் ..சரிங்க...நாமெல்லாம்.. சும்மா அப்படியே கடிச்சு சாப்பிட வேண்டியதுதானுங்கோ... வெ.சந்துரு...

 நாங்கள் தயாரிக்கும் முறை... சுண்ணாம்பு பூசிய பானையில் பனைமரத்து சீவியபாளையிலிருந்து வழியும் தெளுவினை இறக்கி அதை நல்ல சுத்தமான வெள்ளை துணியில் வடிகட்டி பெரிய அகலவாய் உள்ள பாத்திரத்தில் ஊற்றி விறகு அடுப்பில் வைத்து குச்சியால் கிளறி விட்டுக்கொண்டே இருப்பார்கள்..பாகுபதம் வந்ததும் உரலில் இடித்து சலித்த சுக்கு பொடியை துாவி கலக்குவார்கள்.. பின் சரியான பக்குவத்தில் இறக்கி சுத்தமான வெள்ளை துணியை விரித்து குழிகளில் ஊற்றிவிடுவார்கள்.. அடுத்தநாள் பாகு இஞ்சிவிடும்.. சுத்தமான சுகாதாரமான கலப்படம் இல்லாத கருப்பட்டி தயார்... இரண்டாம் நாள் இந்த கருப்பட்டியை சிறிது உடைத்துப் பார்த்தால் சும்மா அல்வா மாதிரி இருக்கும் கடித்து இழுத்தால் ஜவ்வு மிட்டாய் மாதிரி அட..டா..என்ன மணம்..என்ன சுவை.... அதன்பின் குழியிலிருந்து எடுத்த கருப்பட்டியை ஓலை குடிசையினுல் கயிற்றுக் கட்டிலில் ஒரு வாரம் உலர வைத்துவிடுவோம்.. அந்த கருப்பட்டிதான் படத்தில் இருப்பது...மேலும் சில விசயங்களை அவசியம் கூறவேண்டும்.. சில இடங்களில் கருப்பட்டி காய்ச்சும் போது ஒரே நாளில் கெட்டி ஆவதற்காக சுண்ணாம்பு பொடியுடன் சில இரசாயனங்களை கலந்து விற்பனைக்கு உடனடியாக அனுப்பி விடுகிறார்கள்.. இன்னும் சில இடங்களில் கரும்பு ஆலைக்கழிவு மொலாசஸ்யை வாங்கிவந்து காய்ச்சி அதனுள் நியாய விலை கடையில் குறைந்த விலைக்கு திருட்டுத் தனமாக விற்கும் பிளீச்சிங் கெமிக்கல் கலந்த வெள்ளை சா்க்கரையை போட்டு கலக்குகிறார்கள்.. பின் கலர் வருவதற்கு கலர்சாய பொடியையும் போடுகிறார்கள்... நல்ல சுக்கு விலை அதிகம் என்னதால் (சுமாராக 1 கிலோ 300 ரூபாய்) குறைந்த விலையில் ஒருவகை கெமிக்கல் பொடியை வாங்கி அதில் போட்ட கலக்கி விட்டால் சுக்கு வாசம் அடிக்கும்.. அது நாள் ஆக ஆக.. நாற்றம் அடிக்கும்.. அந்த கருப்பட்டியை சாப்பிடும் பலபேருக்கு வயிற்று வலி வரும்.. சிலருக்கு பேதியும் ஆகும்.. சில கடைகளிலும் , வீதியில் கொண்டுவந்து சுத்தமான பனங்கருப்பட்டி என கூவி கூவி விற்கும் பெரும்பாலான கருப்பட்டிகள் இந்த ரகம்தான்... ஒருசில இடங்களில் மட்டும்தான் ஓரளவு முறைப்படி செய்த கருப்பட்டிகனை விற்கிறார்கள்... நன்றி.. நண்பா்களே.. வெ.சந்துரு..

Comments

Popular Posts