பனை பாகம் 3
பனை என்றாலே கிளை இல்லாத தாவரம் என்றுதான் நாம் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்நம்பிக்கையை பொய்ப்பிக்கின்ற வகையில் அரிதாக சில பனைகளை காண முடிகிறது. இவ்வகைப் பனைகளை கிளைப் பனைகள் என்று சொல்வார்கள்...
இப்பனையின் பழங்கள் சாதாரண பனம்பழங்களைக் காட்டிலும் மிகவும் சுவையானவை. சீனி போன்று இனிப்புச் சுவை உடையவை. இதனால் சீனிப் பனை என்றும் இப்பனை கிராம மக்களால் அழைக்கப்படுகின்றது...
அபூர்வமாக சில பனைக்கொட்டைகளில் இரு குரோமொசோம்கள் ஒட்டிக்கொண்டு இருக்கும் .ஒன்று வளரும்போது மற்றொன்றை அழுத்திக் கொண்டு வளரும் . ஆனால் இதில் இரு குரோமோசோம்களுமே ஒன்றை ஒன்று விட்டு பிரிந்து வளர ஆரம்பிக்கிறது . ஆனால் ஒரே பெரிகார்டியம் உறையிலேயே இரண்டும் வளர ஆரம்பிக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு ஒட்டு போட்டதுபோல் வளர்ந்து வெளியே வரும்போது வெளி சூழ்நிலைகளால் பிரிக்கப்பட்டு ஆனால் ஒட்டிக்கொண்டு இரு கிளைகளாக பிரிந்துவிடும் .இதில் கூட அபூர்வமாக ஒன்று ஆண்பனையாகவும் மற்றது பெண்பணையாகவும் மாறிவிடும் . அல்லது இரண்டுமே ஒரே இனமாகவும் மாறிவிடும் .
நன்றி : முகநூல் / Kathiervel kumar/Gopalakrishnan Swaminathan
Comments
Post a Comment