இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்


இயற்கை வேளாண்மை குறித்தான நல்லதொரு கருத்தரங்கம் தண்டுக்காரன் பாளையத்தில்....காமராஜர் பற்றிய ஒரு அருமையான தகவல் கிடைத்தது. ஒருமுறை பிலிப்பைன்ஸ் சென்றிருந்த பொழுது , அங்கே யாருமே கண்ணாடி அணியவில்லை. விசாரித்தபொழுது அவர்கள் அதிகமாக மீன் சாப்பிடுவது தெரிந்தது.உடனடியாக அங்கிருந்து அந்த மீன் குஞ்சு வகைகளை அங்கிருந்து தமிழகத்துக்கு தருவித்தார்..அவைகள்தான் கட்லா,ரோகு, இவையெல்லாம்...
பசுமை ராமநாதன் என்கிற மாமனிதர் மரங்களை பற்றிய அற்புதமான பலப்பல விசயங்களை தெரிவித்தார். 15 ஏக்கரில் மரங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார். நம்மாழ்வார் அடிக்கடி வந்து தங்கிச்செல்வதை பெருமையோடு தெரிவித்தார். விவசாயிகளுக்கு தேவையான ஒரு அருமையான யோசனையும் சொன்னார்...நிலத்தினை வளப்படுத்த , ஊட்டமூட்ட அந்த உரம்,இந்த உரம் என்று செயற்கை உரங்கள் ஏதும் தேவையில்லை....சோளம், ராகி என்று எந்தவிதமான பயிரையும் விதைத்தபிறகு 30 வது நாளில் செய்ய வேண்டியது..6 தேங்காயிலிருந்து 3 லிட்டர் இளநீர் எடுத்து அதை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து
1
ஏக்கர் நிலத்திற்கு தெளிக்க வேண்டியது. இந்த இளநீரில் சைட்டோஹைனி என்கிற அற்புதமான ஊட்ட மருந்து இருக்கிறது. இது அந்த 1 ஏக்கரையும் வளப்படுத்தி விடுகிறது...மரங்கள் பற்றிய எந்தவிதமான தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்பிற்கு : 96550-67894 .

Comments

Popular Posts