Search This Blog
அங்கக விவசாயம் பற்றிய தகவல்கள் பல இணைய தளங்களிலும் ,முக நூல் பக்கங்களிலும் வந்துள்ளன . இன்னமும் புதிய செய்திகள் , குறிப்புக்கள் மற்றும் படங்கள் வந்துகொண்டே உள்ளது. அவற்றில் சிறப்பானவற்றை சிலவும், ஆங்கிலத்தில் வந்துள்ள பதிவுகளின் தமிழாக்கமும் மேலும் மற்றைய சுவையான தகவல்களும் இப்பதிவில் காணலாம். படித்ததை மீண்டும் தேடினால் முகநூல் பக்கங்களில் இருந்து கண்டுபிடித்து எடுப்பதென்பது இயலாதொன்று .வலை பதிவில் இருந்து எடுப்பதென்பது முடியும். தகவல் சேகரிப்பு எனக்கூட சொல்லலாம்.
- Get link
- X
- Other Apps
இயற்கை பூச்சி விரட்டி!பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது.இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் தாவரத்திலிருந்து விரட்டப்படுகின்றன. எனவே பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை
தகவல் மூலம் : முனைவர். ச. வள்ளல் கண்ணன், வேளாண் அறிவியல் மையம், ஆர்.டி.மலை அஞ்சல், குளித்தலை TK, கரூர்
Popular Posts
Posted by
Organic Farmer
Marutha maram
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment