பனை



முக நூல் நண்பர்கள் பலர் எனக்குள்ளனர் . அவர்களில் சிலர் விவசாய  தீவரவாதிகள் . அதில் ஒருவர் அழகு . Kukil  Farms  என்ற பெயரில் முகநூல் பக்கம் உள்ளது. அவரது விருப்பம் நாட்டின  மாடுகள் . புதுகோட்டை அருகே ஒரு சின்ன கிராமத்தில் சார்ந்த இவர் தற்போது அயல் நாட்டில் பனி புரிந்து வருகின்றார். வருங் காலங்களில்  நண்பர்களுடன் இணைந்து நஞ்சில்லா  விவசாயம் செய்ய இருக்கிறார் .

பனையுடன் பிணைந்த பாசப் பிணைப்பு!
எங்கள் கருப்புச் சாமிக்கு அன்புக் காணிக்கை!

பனையை விட்டு விலகி,
பனங்கள்ளை, பனந்தெளுவை விட்டு விலகி,

பாட்டில் பானங்களை.
அதில் அடைக்கப் பட்டு வரும்
தெரிந்தே நஞ்சு கலக்க பட்ட
"இங்கிலீஷ் மாட்டுப் பண்ணைக் கழிவு நீரை"
விளம்பரங்களில் உதட்டில் படாமல்
"சிப்பும்" (உண்மையில் அதில் ஒரு சொட்டைக் கூடக் குடிக்காத)
"ஷ்டார்"களின் சிபாரிசை நம்பிக்
காசு கொடுத்து வாங்கிக் குடித்த நாம் ,

எத்தனை சுகங்களை,
உடல் நலங்களை,
உடல் உறுதியை,
பணத்தை,
இந்தத் தொழிலாளர்களின்
நிம்மதியான நிறைவான வாழ்வை,

இழந்திருக்கிறோம்!

இது பாவமில்லையா?
இது துரோகமில்லையா?
இயற்கைக்குச் செய்யும் வஞ்சகமில்லையா?
இத எல்லாம் இனப் படுலொலை இல்லையா?

தென்னையின் மூத்த சகோதரியான
பனையை மீண்டும் வளர்ப்போம்!
நாமில்லாவிட்டாலும்
நமது வருங்காலச் சந்ததியாவது

"நொங்கக் குடுச்சு நொங்கு வண்டி ஓட்டி" விளையாடட்டும்!

பனை மரங்கள் வெட்டித் தள்ளப் படுவதைப் பார்த்த போதெல்லாம்
எனக்குக் கண்ணீர் பெருகும்!
பாவம்!
நூறாண்டு முதியவர்!
அடியோடு அப்படியே வெட்டச் சாய்கிறார்!
கொடுமை!
இது மகா பாவம்!


 

Comments