தென்னைக் கன்று


மதுரை - சோழவந்தான் ரோட்டில் 50 ஏக்கர் நில பரப்பில் பல்வேறு ரக தென்னைக் கன்றுகளை பழமை விவசாயி பரிசித்துராசா, 65, வளர்த்து வருகிறார். இவரது பண்ணையில் செவ்வல் தென்னை, நாட்டுதென்னை, ஒட்டுத்தென்னை உள்ளிட்ட வகைகள் உள்ளது. செவ்வல் தென்னை கன்றுகள் இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் பலன் தரக்கூடியது. ஒரு மரத்திற்கு 80க்கு மேற்பட்ட காய்கள் அதிகமாக காய்க்கின்றன. இளநீர்... இனிப்பு கலந்த ருசியாக உள்ளது. ஒரு கன்று ரூ.100 க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமல்ல பண்ணையில் கற்பூரவல்லி, பச்சைவாழை, திசுவாழை, முப்பட்டை வாழை போன்ற வாழை ரகங்களும் உள்ளன. அதில் ஒரு திசுவாழை தாரில் அபூர்வமாக 20 சீப்பில் 400 காய்கள் பருத்து பெரிதாக விளைந்துள்ளன. மரங்களை அதிகளவில் வளர்ப்பதன் மூலம் மழை பெய்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறார்.விவசாயி பரிசித்துராசா கூறுகையில், ""விவசாயம், எங்கள் குலத்தொழில். தென்னை சாகுபடியில் மட்டுமல்ல நெல், வாழை, கரும்பு சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைப்பதை வைத்து வாழ்க்கை நடக்கிறது. லயன்ஸ் சங்க நிர்வாகியாக இருந்தபோது ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றேன். அங்கெல்லாம் தென்னைகள் இல்லை. அழகுக்கு சில இடங்களில் காணலாம். தாய்லாந்தில் பச்சைநிற தென்னை அதிகமாக விளைகிறது. இருந்தாலும் நம் தமிழகத்தில் வளரும் சுவையான தென்னைக்கு ஈடாகாது,'' என்றார்.
"
மரங்களை வளர்ப்போம், மழையை பெறுவோம்' என்ற அடிப்படையில் வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகளை வளர்க்க 99654 47274ல் அழைக்கலாம்

Comments