நெல்லில் விதை உற்பத்தி செய்வது எப்படி?
நெல்லில் விதை உற்பத்தி செய்வது எப்படி?
வல்லுநர், சான்று மற்றும் ஆதார விதைகள் என்றால் என்ன ?
வல்லுநர் விதை

வல்லுநர் விதையானது ஒரு நிலையத்தில் (அ) பயிர்ப் பெருக்க திட்டத்தின் கீழ்
உபயம் பெற்று பயிர்ப் பெருக்க வல்லுநரின் கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தி
செய்யப்படும் விதை (அ) பயிர் பாகவழிப் பெருக்கு பொருள் ஒன்றாகும். இதன்
உற்பத்தியானது திறனுள்ள பயிர்ப் பெருக்க வல்லுநரின் கண்காணிப்பில்
நடைபெறும். மேலும் இது ஆதார விதைக்கான மூலதனமாகும். வல்லுநர் விதையானது
இனத்தூய்மையுடன் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில அதனைப் பின்பற்றி
உற்பத்தி செய்யப்படும் சந்ததிகளான ஆதார மற்றும் சான்று விதைகள் தேவைப்படும்
இனத்தூய்மை பெற்றிருக்கவேண்டும். மற்ற தரம் காரணிகளான புறத்தூய்மை,
உயிரற்றப் பொருட்கள், முளைப்புத் திறன் போன்றவை விதை உறையின் மேல் உள்ள படி
குறிப்பிடப்படவேண்டும்.
ஆதார விதை
வல்லுநர் விதையின் சந்ததியாகவோ (அ) அதன் தொடர்ச்சியைத் தெளிவாக விளக்கும் ஆதார விதையாகவோ உற்பத்தி செய்யப்படுவது ஆதார விதையாகும். ஆதார விதையை மூலமாகக் கொண்டும் உற்பத்தி செய்யலாம். ஆதார விதை நிலை I மற்றும் IIன் குறைந்தபட்ச விதைச்சான்று தரங்கள் ஒன்றேயாகும். ஆதாரவிதை நிலை I மற்றும் IIற்கும் சான்றட்டையின் நிறம் வெள்ளை நிறம் ஆகும். சான்று விதை I மற்றும் II ஆகியவற்றை கண்காணித்து, அனுமதியளிப்பது சான்று நிலையங்கள் ஆகும். சான்று நிலையங்கள் கூறியபடி இவ்விதைகள் குறிப்பிட்ட இனத்தன்மைகள் மற்றும் இனத்தூய்மை பெற்றிருப்பதுடன் சான்று தரங்களையும் உறுதி செய்வதாய் அமையவேண்டும்.
சான்று விதை
ஆதார விதையின் சந்ததியாக உற்பத்தி செய்யப்படும் சான்றுவிதை, அவ்விதைப் பயிர்க்கு தேவையான தரங்கள், இனத்தன்மை மற்றும் இனத்தூய்மையை உறுதி செய்யும் நிலையில் இருக்கவேண்டும். சான்று விதைகளை, ஆதார விதை நிலை Iன் பின் மூன்று தலைமுறைக்கு மேல் பெருக்கம் செய்யப்படாத சான்று விதைகளில் இருந்தும் உற்பத்தி
செய்யலாம்.

Comments
Post a Comment