நீரேற்று கவலை
நீரேற்று கவலை :
இது பழங்காலத்து முறை . விவசாயிகளின் அந்நாளைய பாசன முறைக்கு துணைவன். ஏற்றம் கொண்டு நீர் பாய்ச்சும் போது பாடல்கள் பாடுவார்கள் . அது வேலையின் பாரத்தை குறைக்கவே அந்த பாடல்கள் . இன்று வழக்கொழிந்து போனவற்றில் இந்த இனிய பாடல்களும் . முகநூல் அன்பர் பெரியவர் திரு. சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்களின் தகவல் இது.முகப்பில் குறிப்பிட்டது போல் இந்த பதிவு முக்கியத்துவம் கொண்டதால் இது சேகரித்து வைக்கப்படுகின்றது
இதுதான் மாடுகளைக் கொண்டு கவலை ஓட்டும் துலை...
இதன் வழியாகச் செல்லும் வடம் என்கிற பெரிய கனமான கயிறும் வால் கயிறு என்று சொல்லப்படும் சற்று கனம் குறைவான கயிறும் கிணற்றுக்கு உள்ளே கீழும் மேலுமாகச் செல்லும் சால் மற்றும் பரியையும் கிணற்றுக்கு வெளியே துலைக்கு முன்னால் வாரியில் முன்னும் பின்னும் நடக்கின்ற மாடுகளின் கழுத்தில் உள்ள நுகத்தையும் இணைக்கும்...
சாலும் பரியும்....
இவற்றில்தான் நீர் நிரம்பி மேலே வரும்.
துலையைத் தொடும்போது பரியில் இருந்து தண்ணீர் வாய்க்காலில் பாய்ந்து ஓடும்.....
Comments
Post a Comment