அவரை விதைகள்







 அவரை  விதைகள் :
 முகநூளில் வந்த ஒரு அருமையான படைப்பு . தகவலும் கூட . இந்த நவீன இணைய உலகத்தில்  வெள்லேந்தியாய்  ஒரு தேவ மாதா .  பணமும் வேண்டாமாம் அளந்தும் தர மாட்டாராம் . அள்ளி தந்து மகிழுர செய்தாராம்  நன் மங்கை .

வாழ்க இவர் போன்றோர் .
 மழை பொழிவதும்  இவர் போன்ற  நல்லோரால்தான்

தகவல்: அப்துல் பாரூக் / முகநூல்

சத்தியமங்கலம் காட்டில் அமைந்துள்ள குன்றி மலைக்கிராமத்தில் மாதேவியம்மா
வீட்டு திண்ணையில் பார்த்தோம் ஏதோ போல என நினைத்து கேட்டோம்.
இவர்களது நெலத்துல வௌஞ்ச அவரையை பூச்சிகள் எதுவும் தாக்காத வண்ணம்
இப்படி பாதுகாத்து வைத்துள்ளார்கள் வருடக்கணக்கில் கெடாமல் இருக்குமாம்
மாதேவியிடம்"ஒரு கிலோ அவரை என்ன விலை?" என்றேன்
விலை தெரியாது ஏன்னா விற்பதில்லை"இது எங்களது உணவு தேவைக்கு மட்டுமே" என்றார்.
"உங்களுக்கு வேண்ணா எடுத்துக்கொள்ளுங்க" என்றார்
"சரி ஒரு படி தாருங்கள்" என்றேன்.
"அளப்பது கிடையாது. ஏன்னா காசு வாங்குவதில்லை. எங்க காட்டுல பூமாதா கொடுத்ததுக்கு காசு வாங்கலாமா அய்யா..." என்றார்.

Comments