பனை பாகம் 2

 முன் பதிவில் முகநூல் நண்பர் ஒருவரை பற்றி குறிப்பிட்டிருந்தேன் . தொடர்வது  நண்பர் சந்திரமௌலீஸ்வரன்  மருதாச்சலம் .  பல உபயோகமான தகவல்களை பகிர்கின்றவர் . முன்னதும் இதுவும்சந்திரமௌலீஸ்வரன்  மருதாச்சலம் அவர்களின் பதிவே .

  பனையுடன் பிணைந்த பாசப் பிணைப்பு!
எங்கள் கருப்புச் சாமிக்கு அன்புக் காணிக்கை!

கருப்புச் சாமி நாடார்!

அறுபது வயதிலும் தளராத, தொய்யாத, துவளாத, நடுங்காத
நிமிர்ந்த உடலுடன்
கரணை கரணையாகக் கை கால்களுடன்,
முன் நுனி வளைந்த
"மொட்டுத் தோல் வெச்ச"
மஹாராஜா செருப்புகள் "கிறீச் கிறீச்" என்று சப்தமிட,

"ஆம்பரக் கத்தி, பாளக் கத்தி, சுண்ணாம்புக் குப்பாயி" இதையெல்லாம் அடக்கிக் கொண்டு "இடுப்புப் பச்சப் பில்லிட்டில பொட்டி" பின்னால் தொங்க,

தோளில் "எடகவுரு, தளகவுரு" கோர்த்திருக்க,

"தெளுவு முட்டி" இடுப்பில் தொங்க,

"பரிசச லீவில வந்திருக்கர பொடியானுகளுக்குனு....நொங்கு போட வந்தனுங்" என்றபடி,
யாரும் அழைக்காமலே,
எங்களுக்காக,
கம்பீரமாக முறுக்கு மீசையுடன்
வந்து நிற்பார்!

எங்கள் அம்மத்தாவின்,
நடுத்தோட்டத்தில்,
"மட்ட மத்தியானத்தில்",
நூறடிப் பனையில்
"எடகவுறும் தளகவுறும்" இணைத்து ஏறும் கருப்ப சாமியின்
அந்த லாவகம்
பனையின் மங்காத மகிமை!

அவர் வெட்டித் தள்ளி,
இறங்கி வந்த பின் சீவித் தள்ளும்
"எளம் நொங்கு" களை
"வளுசல்களான" நாங்கள் உறிஞ்சித் தள்ளுவதை
வாஞ்சையோடு பார்த்திருப்பார் அவர்!

காலித் தொட்டிகளில் "வண்ணமான" சிலவற்றை எடுத்து வைத்துக் கொள்வார்.
"வவுரு முட்ட முட்ட " உறிஞ்சியதும் எங்களது முதல் வேலை என்ன தெரியுமா?
ஒரு நீண்ட திருப்தியான ஆரோக்கியமான ஏப்பம்!
அதைக் கேட்டதும் ஏதோ அவரே அத்தனை நுங்குகளையும் உறிஞ்சியதைப் போல ஒரு நிறைவு அவர் முகத்தில் விரியும்!

உடனே அவர் எடுத்து வைத்த தொட்டிகளில் குச்சிகளைச் சீவிக் குத்தி ஒரு "கவுட்டிக் குச்சி"யையும் சீவித் தந்து
எங்களுக்கு அவரே "பூட்டி" வழங்கும்
"நொங்கு வண்டி!"
அப்படியே அதை ஓட்டியபடியே
சாளை வரை ஓடினால்
நுங்கு நிறைந்த வயிறு தொம் தொம் என்று குலுங்கிக்
குறைந்து விடும்!

பின்னாலேயே வேகமாக நடந்து வரும் அவர் எங்களுடைய அம்மத்தாவிடம் "இங்க பாருங், பொடுசுக நொங்க கிர்ர்ர்ரனு அடிச்சாச்சு" என்றபடி அமர்ந்து ஒரு பெரிய லோட்டா நிறைய அம்மத்தா தரும் கருப்பட்டிக் காப்பியை உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பார்!

உடனே பசிக்கும்! எங்களுக்கும் அவருக்கும்!

Comments

Popular Posts