தரம் விவசாயின் பார்வையில்








விவசாயி ஒருவர் உயர் தரமான சோளம்  விளைவிப்பவர் . அவர் வசித்த வந்த  ஊரில்  வருடந்தோறும் நடைபெறும்   விவசாய உற்பத்தி போட்டியில் கலந்துகொண்டு சிறப்பு பரிசுகளும்  பட்டயங்களும்  பெறுவார் . ஒரு முறை செய்தி தாள் நிருபர்  அவர்  தன்னை  சுற்றி  உள்ள விவசாயம்  பண்ணுவோருக்கு  தரமான  சோள விதைகளை கொடுத்து பயிரிட செய்வார் என்பதனை அறிந்தார்  .   நிருபர்  அவரை பேட்டி காண்கையில்  " நீங்கள் உங்கள் வசம் உள்ள தரம் நிறைந்த சோள விதைகளை உங்களை சுற்றி உள்ள  விவசாயிகளுக்கு தந்து பயிரிட செய்கின்றீர்களே  இது அவர்களும் உங்களோடு  வருடந்தோறும்  போட்டிதனில் கலந்திட நேரும் போது உங்களை பாதிக்காதா ?" என வினாவினார் . அதற்கு பதில் சொல்லிய விவசாயி " அய்யா  மகரந்தம்  முற்றிய கதிரிலிருந்து  சுழலும் காற்றினது உதவியால்  அக்கம்  பக்கத்தில்  உள்ள நிலங்களில் பரவுகின்றது . என் அருகில் உள்ளோர் தரம் தாழ்ந்த விதை கொண்டு பயிர் செய்தால் அயன்  மகரந்த சேர்க்கையும்  தரம் இல்லாது  இருக்கும் . என் சோள விவசாயம் தரம் நிறைந்ததாய் இருக்க வேண்டுமானால் என் பக்கத்தில் பயிரிடும் விவசாயியும்  தரமான விதை கொண்டு பயிர் செய்ய வேண்டும் ". என கூறினார் . தனது சோள  உற்பத்தி உயர் தரமானதாய் இருக்க வேண்டுமானால் சுற்றி பயிரிடோவறது  சோளமும் தரமானதாய் இருத்தல் வேண்டும் . சிறப்பான அயன் மகரந்த சேர்க்கை  சிறப்பான மகசூல் என்பதனை தெளிவாய் புரிந்துக்கொண்டு அதற்கு எற்றார் போல் நிலை பாடுதனை  அமைத்து கொண்டார் .
விவசாயின்  சிறப்பான    உண்மை  உள நிலைதனை    நிருபர் தெரிந்து கொண்டார் . அனைவரோடும் இயைந்து பிணைக்கப்பட்டு  நடத்தி செல்லும்   வாழ்க்கை நெறி  முறை  எவ்வளவு  உயர்வானது  என்பதனை எளிதாய் அந்த விவசாய நண்பர் தெளிவுபடுத்திவிட்டார் .ஒத்திசைவோடு  உடன் இருப்போர்,உற்றார் , உறவினர் ,நண்பர்கள்  மற்றும் அனைவரோடும்  இருக்க முடியுமேஆனால்  பிறகென்ன எங்கும் அமைதி நிலவும் .

 வெற்றிகள் தனிபடுத்ததில் ஏற்படுவதில்லை மன இணக்கத்தோடு உண்டான ஒருங்கிணைந்த முயற்சிகள் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம். 

Comments

Popular Posts