கட கீரை (ரக்கிரி கடஞ்சது)
கட கீரை (ரக்கிரி கடஞ்சது)
நம்மூர்லெ ஓசிலேயே கிடைக்கிற ஒரே கீரை இந்த கட கீரைதானுங்க இதுவரைக்கு நாங்க காசு குடுத்து இந்த கீரையை வாங்கினதே இல்லைங்க, வீட்டு பொடக்காலிலெ இல்லாட்டி பக்கத்து காடு தோட்டங்களிலயோ பொருச்சுட்டு வந்து மண் சட்டியில் வெச்சு கடஞ்சு இத்துனூண்டு தேங்காய் எண்ணெய் ஊத்தி சாப்பாடுலே பெனஞ்சு சாப்பிட்டா அட ட டா அவ்வளவ்வு அருமையா இருக்கும்ங்ககியாஸ் அடுப்பு வந்ததுக்கு அப்புறம் இப்பவெல்லாம் யாருங்க மண் சட்டி வெச்சுருக்காங்க ?,,,, இருந்தாலும் நானும் எங்க அம்மாவும் பொள்ளாச்சிலெ உடையார் வீதிக்கு போயி கியாஸ் அடுப்புலெ வெக்கறதுக்குன்னெ ஒரு மண் சட்டியை வாங்கிட்டு வந்து அதுலெ வெச்சு கெடஞ்சுதான் இந்த போட்டோவுலெ இருக்குற ரக்கிரி ( கீரையை நம்மூர்லெ ரக்கிரினுதான் சொல்லுவோம் )
1.கட கீரை – 2 கட்டு
2. பச்சை மிளகாய் – 4
3. சின்ன வெங்காயம் – 10(50 கிராம் )
4. தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
5. உப்பு – அளவா போட்டுக்குங்க
சட்டிலெ நாலு டம்ளர் தண்ணி ஊத்தி அளவா ரெண்டு நிமிஷம் காய வெயுங்க, இப்போ பச்சை மிளகாயை காம்பை மட்டும் கில்லி அருக்காமெ அப்புடியே சுடு தண்ணிலெ போட்டு அஞ்சு நிமிஷம் கொதிக்க விடுங்க,, இதுலெ நல்லா அலாசி வெச்சுருக்கிற கீரையை போட்டு மறுபடியும் அஞ்சு நிமிஷம் கொதிக்க விடுங்க
அதுக்கு அப்புறம் தண்ணி நெறையா இருந்தா வடுச்சுட்டு, உருச்சு வெச்சுருக்கிற சின்ன வெங்காயத்தை சேர்த்து அளவா உப்பு போட்டு
பருப்பா முட்டியை வெச்சு நைசா கீரையை கெடையுங்க கடைசிலே தேங்காய் எண்ணெய் ரெண்டு ஸ்பூன் ஊத்தி கொஞ்ச கலக்கி விடுங்க
அவ்வளவ்வுதானுங்க … எதுக்கும் சாப்பாடு கொஞ்சம் அதிகமாவெ ஆக்கிங்க ,,, ஏனா கட கீரையோட சாப்பிட்டா நல்லா பசிக்கும்ங்க
தண்டங் கீரை , சிறு கீரையை வெச்சும் இந்த மாதிரி செஞ்சு கெடஞ்சு சாப்பிடலாம்ங்க
அருமை அருமை..
ReplyDelete