பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்
சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல்
தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக
செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு
தேறும்.
வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடும . இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.
பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
பிரண்டை துவையல்
பிரண்டை – ஒரு பிடி
வெங்காயம் – பாதி
காய்ந்த மிளகாய் – 2 அ 3
தனியா – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 3 அ 4 பல்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வதக்க
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தாளிக்க
* பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி
சேர்த்து நன்கு வதக்கவும்.
* பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.
* வதங்கியதும்,ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில்,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.
* பிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
* சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.
Source:Facebook (பசுமை காப்பாளர்கள்)

Comments
Post a Comment