கலப்பு மரம் வளர்ப்பு
கலப்பு
மரம் வளர்ப்பு
தற்போதைய சூழலில் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளால் விவசாயிகள் மத்தில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, இருந்தபோதும் சம்சரிகளிடம் சிறு தயக்கம் மரம் வைத்தால் 25, 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமே அதுவரை வருமானத்திற்கு என்ன செய்வது என்ற குழப்பம், இதற்க்கு தீர்வு தான் கலப்பு மரம் வளர்ப்பு
ஒரே வகையான வயது அதிகம் உடைய மரங்களை வைத்துவிட்டு பலவருடம் காத்திருப்பதைவிட வெவ்வேறு வயதுடைய மரங்களை கலந்து நடுவதன்மூலம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம், ஆச்சா போன்ற மரங்களையும் இடையில் குமிழ், மலைவேம்பு போன்ற மரங்களையும் 15 அடி இடைவெளில் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடி இடைவெளில் நடவேண்டும். இவ்வாறு நடும்போது சவுக்கு 4 ஆண்டுகளிலும் குமிழ் 8 ஆண்டிலும் வருமானம் தரும், குமிழ் மருதாம்பு மரம் என்பதால் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டம்முரையாக அறுவடைக்கு வரும், தேக்கு, வேங்கை, மகோகனி போன்ற மரங்களை 20, 25 ஆணுகளுக்குபின் அறுவடை செய்யலாம்.
நடவு முறையை பார்போம்
மரம் நடும் இடத்தை இரண்டுசால் உளவு ஓடியபின் 2 * 3 அடி அளவுள்ள குழிகளை 5 அடிக்கு 5 அடி இடைவெளில் எடுத்து அதில் தொளுவுரமிட்டு சிலநாள் ஆரபோடவேண்டும், அதன்பின் தரமான நாற்றுகளை வாங்கி நடவு செய்யலாம், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம், ஆச்சா போன்ற மரங்களை 15 அடிக்கு 15 அடி இடைவேளிலும், உட்புறம் 15 அடிக்கு 15 அடி இடையில் குமிழ், மலைவேம்பு போன்ற மரங்களை சில வரிசைகள் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடிக்கு 5 அடி (படத்தில் உள்ளதுபோல்) இடைவெளில் நடவேண்டும். இம்முறையில் மரம் வளர்க்கும் போது நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருமானம் கிடைப்பதுடன் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளும் வருவதில்லை.
மரம் வளர்ப்போம் வளம்பெறுவோம்..

Comments
Post a Comment