Search This Blog
அங்கக விவசாயம் பற்றிய தகவல்கள் பல இணைய தளங்களிலும் ,முக நூல் பக்கங்களிலும் வந்துள்ளன . இன்னமும் புதிய செய்திகள் , குறிப்புக்கள் மற்றும் படங்கள் வந்துகொண்டே உள்ளது. அவற்றில் சிறப்பானவற்றை சிலவும், ஆங்கிலத்தில் வந்துள்ள பதிவுகளின் தமிழாக்கமும் மேலும் மற்றைய சுவையான தகவல்களும் இப்பதிவில் காணலாம். படித்ததை மீண்டும் தேடினால் முகநூல் பக்கங்களில் இருந்து கண்டுபிடித்து எடுப்பதென்பது இயலாதொன்று .வலை பதிவில் இருந்து எடுப்பதென்பது முடியும். தகவல் சேகரிப்பு எனக்கூட சொல்லலாம்.
- Get link
- X
- Other Apps
600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள்
தனக்கு
ஏற்பட்ட விசகடிக்கு மருந்து
கிடைக்காததால் உண்டான தேடல்
இன்று ஒரு மூலிகை பண்ணையை
உருவாக்கி உள்ளது அதுதான்
செ.சி.ப
மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி
மையம்,
கீரமங்கலம்,
புதுக்கோட்டை
மாவட்டம்.
இயற்கையாகவே
மரம் வளர்ப்பு மூலிகை செடி
வளர்ப்பில் ஆர்வமுடையவர்
திரு.செ.சி.பவானந்தம்(9629601855),
தனது
வீட்டின் அருகிலேயே மூலிகை
செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன்
வளர்த்து வந்த பவானந்தம்
அவர்களை கி.பி
2000
மாவது
ஆண்டு தனது தாயாரின் அஸ்தி
கரைக்க கடற்கரை சென்றபோது
பாம்பு கடித்து விட்டது,
விசகடிக்கு
சிறியநங்கை பொடி கடற்கரை
பகுதி மக்களிடம் கேட்டபோது
யாரும் கொடுக்க முன்வரவில்லை
பின்னர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.
குணமடைந்தவர்
மூலிகை செடிகளை தேடி பயணிக்க
ஆரம்பித்தார் வெற்றியும்
கண்டார் இன்று அவரது பண்ணையில்
600க்கு
மேலான மூலிகை செடி மற்றும்
மரங்கள் உள்ளன 1000
மூலிகைக்கும்
மேல் வளர்ப்பதே தனது
விருப்பமாகக்கொண்டுள்ளார்.
மூலிகைகளின்
பயனை தான்மட்டும் உணர்ந்தால்
போதாது என்று பள்ளிமாணவர்கள்
மற்றும் இளைஞர்களிடம் மூலிகை
செடிகள் பற்றிய விழிப்புணர்வு
ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை
என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு
பாடம் எடுத்துவருகிறார்.திரு.பவானந்தம்
அவர்களது பண்ணையில் உள்ள
மூலிகைகள் சிலவற்றின்
பெயர்கள்:சிறியநங்கை,
சக்திசாரணை,
நாகமல்லி,
நாகநந்தி,
கற்பூரவள்ளி,
ரணகள்ளி,
சர்பகந்தி,
சித்தரத்தை,
நத்தைசூரி,
இன்சுலின்
செடி,
சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்),
அத்தி,
அரசு,
ஆடாதோடை,
அசோகமரம்,
அரைரூட்,
அகில்,
செவ்அகில்,
அருகம்புல்,
அரிவாள்மனை
பூண்டு,
அவுரி,
ஆடுதீண்டாபாளை,
ஆவாரை,
இஞ்சி,
உத்திராட்சம்,
ஊமத்தைகசகசா,
கண்டங்கத்திரி,
கச்சாகுறிஞ்சான்,
கற்பூரவள்ளி,
கடுகு,
கடுக்காய்,
கரிசலாங்கண்ணி,
கறிவேப்பிலை,
கஸ்தூரி
மஞ்சள்,
காசுக்கட்டி,
கிராம்பு,
கீழாநெல்லி,
குங்கிலியம்,
குடசப்பாலை,
குப்பை
மேனி,
கோரைக்
கிழங்கு,
சந்தனம்,
சாதிக்காய்,
சீதா,
சுண்டை,
செம்பருத்தி
தண்ணீர்விட்டான் கிழங்கு,
தவசு
முருங்கை,
தழுதாழை,
தாழை,
தாளிசபத்திரி,
தான்றிக்காய்,
திப்பிலி,
துத்தி,
தும்பை,
துளசி,
தூதுவளை,
தேற்றான்கொட்டை,
நஞ்சறுப்பான்,
நந்தியாவட்டை,
நன்னாரி,
நாயுருவி,
நாவல்,
நித்யகல்யாணி,
நிலவேம்பு,
நிலபனை,
அய்யன்பனை
நிலாவிரை,
நீர்முள்ளி,
நுணா,
நெருஞ்சி,
நெல்லி,
நொச்சி,
பப்பாளி,
பிரண்டை,
பிரின்சி,
புதினா,
பேரரத்தை,
பொடுதலை,
மஞ்சள்,
மணத்தக்காளி,
மருதாணி,
மல்லிகை,
மிளகு,
முடக்கறுத்தான்,
முட்சங்கன்,
முருக்கன்,
மூக்கிரட்டை,
வசம்பு,
வல்லாரை,
வாதநாராயணன்,
வெட்டுக்காய்
பூண்டு,
பூனைகாலி,
வெள்ளெருக்கு,
வெற்றிலை,
வேம்பு,
கும்பகொடளி,
குண்டுமணி(கருப்பு,
சிவப்பு,
மஞ்சள்,
சாம்பல்),
ஆலமரம்,
மா,
பலா,
களாக்காய்,
வன்னி,
விடுதிகொட்டை,
ஊமத்தை,
உதிரவேங்கை,
கொடம்புளி,
நற்குருந்தம்,
பதிமுகம்,
செண்பகம்,
யானைகுண்டுமணி,
பன்னீர்
கொய்யா மற்றும் பலவிதமான
மூலிகைகள்
Popular Posts
Posted by
Organic Farmer
Marutha maram
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment