நாட்டு கோழி குஞ்சுகள்

நாட்டு கோழி குஞ்சுகள் நல்லா வளர வேண்டுமா? கால்நடைத்துறையினர் ஆலோசனை
நாட்டு கோழி குஞ்சுகளுக்கு தீவன மாக கரையான் தயாரிப் பது குறித்து கால்நடைத்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் கால்நடை களை வளர்த்து வருகின்ற னர். கால்நடைகளுக் கான தீவன பொருட்கள் விலை உயர்வு காரணமாக கோழிகளுக்கு கரையான் தீவனங் களை வழங்கலாம் என கால்நடைத்துறையி னர் ஆலோ சனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை துறையினர் கூறியதாவது: கரையான் உண்ட நாட்டு கோழி குஞ்சுகள் மற்ற குஞ்சு களை விட இருமடங்கு வளர்ச்சி அடையும். கரை யான் சத்து மிக்கது. இதில் புரதம் 36 சதவீதம், கொழுப்பு 44.4 சதவீதம், எரிசக்தி 560 கலோரிகள் உள்ளன.
சில வகை கரையான்களில் வளர்ச்சி ஊக்கி 20 சதவீதம் உள்ளது. இதன்மூலம் கோழி குஞ்களின் எடை கூடும். இத்தகைய கரையான்களை உற்பத்தி செய்ய ஒரு பழைய பானை க்குள் கிழிந்த, கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட் டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார் பொருட்கள் ஆகியவற்றை திணித்து அவ ற்றி கொஞ்சம் நீர் தெளிக்க வேண்டும்.
இதனை வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ் த்து வைக்க வேண்டும். மாலையில் கவிழ்த்து வை த்து, மறு நாள் காலையில் பானையை பார்த்தால் தேவையான கரையான்கள் உற்பத்தியாகி இருக்கும்.
கரையான் இருக்கும் பகுதியில் கோழி குஞ்சுகளை விட்டால் அனைத்தையும் குஞ்சுகள் தின்றுவிடும். கரையான் தின்ற அரைமணி நேரத்துக்கு குஞ்சுகளுக்கு தண்ணீர் வைக்கக் கூடாது.
ஒரு பானையில் சேரும் கரையான் 10 முதல் 15 குஞ்சுகளுக்கு போதுமானது. செம்மண் உள்ள பகுதிகளில் அதிக கரையான்கள் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட
பானைகளை கவிழ்த்து வைக் கலாம். சூரிய உதயத்திற்கு முன்பு கரையான் களை கோழிகளுக்கு இரை யாக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பகுதியில் உள்ள எறும்புகள் கரையான்களை தின்றுவிடும் என்றார்.


 நன்றி :FB Pages/Kukil Farms

Comments

Popular Posts