'கிராமங்களில் மறைந்திருக்கும் விஞ்ஞானிகள்'



விவசாயிகளின் நண்பனின் நண்பன்; இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர்; பள்ளி குழந்தைகளுக்கு, 100 விதமான அறிவியல் செய்முறைகளை இலவசமாக கற்று தரும் வாத்தியார்; 'வெர்மி டெக்' எனும் வார்த்தையை, உலகிற்கு அறிமுகப்படுத்தி அதை, இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தவர்; மத்திய அரசின் சார்பில், அடிப்படை செய்முறை அறிவியலை, தென் மாநிலப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்; கழிவுநீரை எளிய முறையில் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மூலம், நகர்ப்புற மக்களிடமும் நன்கு அறிமுகமானவர்; இயற்கை, மண்புழு விஞ்ஞானி; சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர், முன்னாள் உயிர் வேதியியல் துறை தலைவர்... இப்படி பல்வேறு முகங்களைக் கொண்ட, டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலை, அவரது பாலவாக்கம் இல்லத்தில் சந்தித்தோம். மூச்சு விடும் இடைவெளியை கூட, தன் பேச்சுக்கு விடாமல் மண் பற்றியும், மண்ணின் உயிர் பற்றியும் பேசி கொண்டே இருக்கிறார். அவருடன் இனி...

* நல்ல மண்ணுன்னா எப்படி இருக்கணும்?
மழை பெஞ்சா, மண்வாசம் வரணும். அதாவது, உயிர்த் தன்மையோட, நுண்ணுயிர்கள் நிறைஞ்சதா இருக்கணும். ஆனா, சாதாரண தண்ணிக்கும், உயிரற்ற மண்ணுக்கும் வாசனை கிடையாது.

* செயற்கை உரங்களுக்கு அடிமையாகி இருந்த நம் மண்ணையும், மக்களையும், இயற்கை வழிக்கு திரும்ப அழைக்கும்போது, எந்த மாதிரியான இடர்ப்பாடுகள் வந்தன?
எல்லா துறையிலேயும் எதிர்கொள்கிற பிரச்னைகளை தான், நாங்களும் சந்திச்சோம். ஒரு செத்த மீன் அழுகறதுக்கு, பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்கள் தான் காரணம். அதை உப்பு போட்டு கருவாடாக்கினா நுண்ணுயிர்கள், மீன் மேல அண்டாது. அப்படித்தான் நம்ம மண்ணும். செயற்கை உரம்ங்கற உப்பை, வயல் மண்ணுல போடறதால, மண்புழு உட்பட, அத்தனை நுண்ணுயிர்களும் செத்து போயிடும்னு, சொன்னோம். அதிக செலவில்லாத, இயற்கையான, பாரம்பரிய முறை எருவை பத்தியும், பூச்சிக்கொல்லிகளை பத்தியும் எடுத்து சொன்னோம். விவசாயிகள் பாவம். அவங்க எதை நம்புறதுங்கற குழப்பத்தில இருந்தாங்க. கோ. நம்மாழ்வார் அண்ணாச்சி உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள், பயனடைஞ்ச விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, உழைக்க ஆரம்பிச்சோம். ஊடகங்கள் எங்களோட எண்ணங்களை மக்கள்கிட்ட எடுத்துட்டுப் போக உதவியா இருக்காங்க.

* எளிமையா ஒரு உரம், ஒரு பூச்சி விரட்டியை எப்படி தயாரிக்கிறது?
வீட்டுல தேவையில்லைன்னு எரியற, பிளாஸ்டிக் பாத்திரங்களோட அடியில சின்னச் சின்னதா ஓட்டை போட்டு, அதுல ஜல்லி, மணல், மண் போட்டு, அதுமேல அழுகிப் போன காய்கறி, பழங்கள், இலைகளைப் போடணும். காலை, மாலை ரெண்டு வேளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, கிளரணும். அதுதான் எரு. அதுல, சூடு தணிஞ்ச பிறகு, மண்புழுவை விடணும். ஒரு வாரத்துல, இயற்கையான உரம் தயார் ஆகிடும். மண்புழு வேணும்னா, மழைக்காலத்துல, தோட்டங்கள்ல, மண் அங்காங்கே குவிஞ்சிருக்கும். அந்த இடங்கள்ல தோண்டினா, மண்புழு கிடைக்கும். இஞ்சி, பூண்டு 100 கிராம்; பெருங்காயம் 10 கிராம், இந்த மூன்றையும் அரைச்சு, 10 லிட்டர் தண்ணில, 15 நாட்கள் ஊற வைச்சு, அதோட, கோமியம் 1 லிட்டர், 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற வைச்சா, வீரியமான பூச்சிவிரட்டி தயாராயிடும். அதை, 9:1ங்கற விகிதத்துல, தண்ணில கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.

* சாண எரு கிடைக்காதவங்க, என்ன செய்யலாம்?
தயிரை, ஒரு வாரம் புளிக்க வைச்சு, அதை பயன்படுத்தலாம்.

* தண்ணீர் பற்றாக்குறை இருக்கிற நகரங்கள்ல, தோட்டம் வளர்க்கிறது சாத்தியமா?
தேங்காய் நார் மாதிரி, தண்ணியை தேக்கி வைக்கிற பொருள் எதுவுமே இல்ல. சின்ன பிளாஸ்டிக் டப்பாக்கள்ல மண் மேல, தேங்காய் நார் தூவி, செடி வைச்சா அதிக தண்ணி தேவைப் படாது. ஒவ்வொரு வீட்டிலேயும் துளசி, கற்பூரவல்லி போன்ற மருத்துவ செடிகளையாவது வளர்க்கணும்.

* இன்றைய மாணவர்கள், உங்களை போல ஒரு விஞ்ஞானியாகணும்னா என்ன செய்யணும்?
நாங்க படிச்சப்போ இருந்த கட்டுப்பாடும், சுதந்திரமும் இப்போ இல்ல. ஆசிரியர்கள், எங்களோட தனித்திறமைகளை புரிஞ்சுக்கிட்டு ஊக்கப்படுத்துவாங்க. நாங்களும், சுதந்திரமா கருத்துகளை சொல்வோம். இன்னைக்கு லட்சங்களை கொட்டி, பெத்தவங்க படிக்க வைக்கிறாங்க. ஆனா, அந்த பள்ளிகள்ல, 'பேசாதே, இதை மட்டும் படி'ன்னு, மதிப்பெண் வாங்கறதுக்காகத்தான் மாணவர்களை பழக்குறாங்க. நான், பல அறிவியல் கருத்தரங்கங்கள்ல கவனிச்ச வரைக்கும், நுனிநாக்கு ஆங்கிலம் பேசுற பள்ளி குழந்தைகளை விட, கிராமப்புற பள்ளிகள்லேருந்து வர்ற குழந்தைகள்கிட்ட கற்பனையும், கண்டுபிடிக்கும் ஆர்வமும் அதிகமா இருக்கு. நாம தவறா சொல்லிடுவோமோங்கற தயக்கமும், பயமும்தான், அவங்களைத் தடுக்குது. அந்த மாதிரி மாணவர்களை கண்டுபிடிச்சு, ஆசிரியர்களும், அரசும், விஞ்ஞானிகளும் ஊக்கப்படுத்தணும். அப்போ, மண்ணையும், மக்களையும் ஊனப்படுத்தாத, சமூகத்துக்குத் தேவையான கண்டுபிடிப்புகளும், உலகை திரும்ப பார்க்க வைக்கும் விஞ்ஞானிகளும் வெளிவருவது நிச்சயம்.
'கிராமங்களில் மறைந்திருக்கும் விஞ்ஞானிகள்' விவசாயிகளின் நண்பனின் நண்பன்; இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர்; பள்ளி குழந்தைகளுக்கு, 100 விதமான அறிவியல் செய்முறைகளை இலவசமாக கற்று தரும் வாத்தியார்; 'வெர்மி டெக்' எனும் வார்த்தையை, உலகிற்கு அறிமுகப்படுத்தி அதை, இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தவர்; மத்திய அரசின் சார்பில், அடிப்படை செய்முறை அறிவியலை, தென் மாநிலப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்; கழிவுநீரை எளிய முறையில் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மூலம், நகர்ப்புற மக்களிடமும் நன்கு அறிமுகமானவர்; இயற்கை, மண்புழு விஞ்ஞானி; சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர், முன்னாள் உயிர் வேதியியல் துறை தலைவர்... இப்படி பல்வேறு முகங்களைக் கொண்ட, டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலை, அவரது பாலவாக்கம் இல்லத்தில் சந்தித்தோம். மூச்சு விடும் இடைவெளியை கூட, தன் பேச்சுக்கு விடாமல் மண் பற்றியும், மண்ணின் உயிர் பற்றியும் பேசி கொண்டே இருக்கிறார். அவருடன் இனி...
* நல்ல மண்ணுன்னா எப்படி இருக்கணும்? மழை பெஞ்சா, மண்வாசம் வரணும். அதாவது, உயிர்த் தன்மையோட, நுண்ணுயிர்கள் நிறைஞ்சதா இருக்கணும். ஆனா, சாதாரண தண்ணிக்கும், உயிரற்ற மண்ணுக்கும் வாசனை கிடையாது.
* செயற்கை உரங்களுக்கு அடிமையாகி இருந்த நம் மண்ணையும், மக்களையும், இயற்கை வழிக்கு திரும்ப அழைக்கும்போது, எந்த மாதிரியான இடர்ப்பாடுகள் வந்தன? எல்லா துறையிலேயும் எதிர்கொள்கிற பிரச்னைகளை தான், நாங்களும் சந்திச்சோம். ஒரு செத்த மீன் அழுகறதுக்கு, பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்கள் தான் காரணம். அதை உப்பு போட்டு கருவாடாக்கினா நுண்ணுயிர்கள், மீன் மேல அண்டாது. அப்படித்தான் நம்ம மண்ணும். செயற்கை உரம்ங்கற உப்பை, வயல் மண்ணுல போடறதால, மண்புழு உட்பட, அத்தனை நுண்ணுயிர்களும் செத்து போயிடும்னு, சொன்னோம். அதிக செலவில்லாத, இயற்கையான, பாரம்பரிய முறை எருவை பத்தியும், பூச்சிக்கொல்லிகளை பத்தியும் எடுத்து சொன்னோம். விவசாயிகள் பாவம். அவங்க எதை நம்புறதுங்கற குழப்பத்தில இருந்தாங்க. கோ. நம்மாழ்வார் அண்ணாச்சி உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள், பயனடைஞ்ச விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, உழைக்க ஆரம்பிச்சோம். ஊடகங்கள் எங்களோட எண்ணங்களை மக்கள்கிட்ட எடுத்துட்டுப் போக உதவியா இருக்காங்க.
* எளிமையா ஒரு உரம், ஒரு பூச்சி விரட்டியை எப்படி தயாரிக்கிறது? வீட்டுல தேவையில்லைன்னு எரியற, பிளாஸ்டிக் பாத்திரங்களோட அடியில சின்னச் சின்னதா ஓட்டை போட்டு, அதுல ஜல்லி, மணல், மண் போட்டு, அதுமேல அழுகிப் போன காய்கறி, பழங்கள், இலைகளைப் போடணும். காலை, மாலை ரெண்டு வேளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, கிளரணும். அதுதான் எரு. அதுல, சூடு தணிஞ்ச பிறகு, மண்புழுவை விடணும். ஒரு வாரத்துல, இயற்கையான உரம் தயார் ஆகிடும். மண்புழு வேணும்னா, மழைக்காலத்துல, தோட்டங்கள்ல, மண் அங்காங்கே குவிஞ்சிருக்கும். அந்த இடங்கள்ல தோண்டினா, மண்புழு கிடைக்கும். இஞ்சி, பூண்டு 100 கிராம்; பெருங்காயம் 10 கிராம், இந்த மூன்றையும் அரைச்சு, 10 லிட்டர் தண்ணில, 15 நாட்கள் ஊற வைச்சு, அதோட, கோமியம் 1 லிட்டர், 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற வைச்சா, வீரியமான பூச்சிவிரட்டி தயாராயிடும். அதை, 9:1ங்கற விகிதத்துல, தண்ணில கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். * சாண எரு கிடைக்காதவங்க, என்ன செய்யலாம்? தயிரை, ஒரு வாரம் புளிக்க வைச்சு, அதை பயன்படுத்தலாம். * தண்ணீர் பற்றாக்குறை இருக்கிற நகரங்கள்ல, தோட்டம் வளர்க்கிறது சாத்தியமா? தேங்காய் நார் மாதிரி, தண்ணியை தேக்கி வைக்கிற பொருள் எதுவுமே இல்ல. சின்ன பிளாஸ்டிக் டப்பாக்கள்ல மண் மேல, தேங்காய் நார் தூவி, செடி வைச்சா அதிக தண்ணி தேவைப் படாது. ஒவ்வொரு வீட்டிலேயும் துளசி, கற்பூரவல்லி போன்ற மருத்துவ செடிகளையாவது வளர்க்கணும்.
 * இன்றைய மாணவர்கள், உங்களை போல ஒரு விஞ்ஞானியாகணும்னா என்ன செய்யணும்? நாங்க படிச்சப்போ இருந்த கட்டுப்பாடும், சுதந்திரமும் இப்போ இல்ல. ஆசிரியர்கள், எங்களோட தனித்திறமைகளை புரிஞ்சுக்கிட்டு ஊக்கப்படுத்துவாங்க. நாங்களும், சுதந்திரமா கருத்துகளை சொல்வோம். இன்னைக்கு லட்சங்களை கொட்டி, பெத்தவங்க படிக்க வைக்கிறாங்க. ஆனா, அந்த பள்ளிகள்ல, 'பேசாதே, இதை மட்டும் படி'ன்னு, மதிப்பெண் வாங்கறதுக்காகத்தான் மாணவர்களை பழக்குறாங்க. நான், பல அறிவியல் கருத்தரங்கங்கள்ல கவனிச்ச வரைக்கும், நுனிநாக்கு ஆங்கிலம் பேசுற பள்ளி குழந்தைகளை விட, கிராமப்புற பள்ளிகள்லேருந்து வர்ற குழந்தைகள்கிட்ட கற்பனையும், கண்டுபிடிக்கும் ஆர்வமும் அதிகமா இருக்கு. நாம தவறா சொல்லிடுவோமோங்கற தயக்கமும், பயமும்தான், அவங்களைத் தடுக்குது. அந்த மாதிரி மாணவர்களை கண்டுபிடிச்சு, ஆசிரியர்களும், அரசும், விஞ்ஞானிகளும் ஊக்கப்படுத்தணும். அப்போ, மண்ணையும், மக்களையும் ஊனப்படுத்தாத, சமூகத்துக்குத் தேவையான கண்டுபிடிப்புகளும், உலகை திரும்ப பார்க்க வைக்கும் விஞ்ஞானிகளும் வெளிவருவது நிச்சயம்.


Nanri:  FB/Kukil Farms

Comments

Popular Posts