உணவு வழித்தடங்கள்





Food  Miles : இது ஒரு புதிய சொல் . தற்போது உணவு சார்ந்த செய்திகளில் இந்த சொல் காணப்டுகின்றது . இக்காலத்தில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் பல கோணங்களில் உணவு வழி தடங்களை பற்றி சிந்தித்து வருகின்றனர் . உணவு வழித்தடங்கள் என்றால் என்? நீங்கள் அன்றாடம் சாப்பிடும் அல்லது சமைக்க உபயோகபடுத்தும் காய், கனி ,மளிகை பொருட்கள்  மற்றும் பால் , இறைச்சி மற்றும் அணைத்து பொருள்களும் நகரத்தில் வசிக்கும் நம் அனைவருக்கும் எங்கிருந்து வருங்கின்றது? அரிசி என்றால் பக்கத்து மாவட்டங்களில் இருத்தும் , மிளகாய் தனியா போன்றவை தென் மாவட்டங்களில் இருந்தும் வருகின்றது .ஆப்பிள் என்றால் காஷ்மீர் ,ஆரஞ்சு என்றால் நாக்பூர் , நவதானியங்கள் தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்  இவை அனைத்தும் நம் நினைவிற்கு வருவது.

ஆக  நகரத்தில் வசிக்கும் அனைவரும் எந்த பொருளையும் அங்கே விளைந்தது அதனையே நாங்கள் உட்கொள்கிறோம் என பீற்றிக்கொள்ள முடியாது.மொட்டை மாடியில் சிறு காய்கறி தோட்டம் வைத்து ஏதோ ஓர் அளவிற்கு சில காய்கறிகளை விளைவிக்கின்றவர்களை  தவிர்த்து  அனைத்தும் வெளியில் இருந்து தருவித்ததே .

இவ்வளவு  நாட்களாய் இல்லாத இந்த  அக்கறை இப்போது ஏன் என்றே கேள்வி எழலாம் .
நன்றாக யோசித்து பார்போமானல்  நிலவரம் புரியும்.
ஒரு சின்ன உதாரணம் : அண்டை மாநிலம் பெங்களூரில் இருந்து நாள்  ஒன்றிற்கு  சுமார் 20 லாரி  அளவிற்கு தக்காளி வருகின்றது . இந்த 20 லோடும் எரிபொருள் செலவு செய்கின்றன . அதோடு மாசும் ஏற்படுத்துகின்றது . வேலூர் அல்லது மதுராந்தகம் போன்ற இடங்களில் இருந்து  இந்த தக்காளி பெறமுடியுமே ஆனால  எரிபொருள் சிக்கனத்தோடு  மாசினையும் குறைக்க இயலும் . இது ஒரு உதாரணமே . இது போல் எல்லாவற்றிக்கும் கணக்கிடுதல்  மற்றும் திட்டமிட்டு பயிர் செய்வித்தல் ஆகிய ரெண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்தால்  சுற்றுப்புற சூழல் மாசு படுவது ,பூமி வெப்பமாகுதல் ,எரிபொருள் சிக்கனம் ஆகிய மூன்று பிரச்சனைகளை  ஒரு கட்டிற்குள்  கொண்டு வர இயலும் .

நண்பரின் பதிவினை பார்போம் சுருக்கமாக : ஸ்லோவேனியா நாட்டில் வீட்டின் பின்புறம் அனைவராலும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செய்யப்படும் காய்கறி தோட்டம் இது.  என்ன பயன் இதனால்? அப்பகுதியில் முன்கூட்டி திட்டமிட்டு காய்கறி பயிர் செய்து வருவதால் அது சுயசார்படைந்த ஊராய்  மாறிவிட்டது.குறைவின்றியும்,தேவைக்கு அதிகமாகவும் பயிர் இடாததால் அங்கு பொருள் வீணாவதும் இல்லை , இல்லை என்ற தட்டுப்பாடும் காண்பதில்லை . இந்த நிறைவிற்கு திட்டம் இடுதலே காரணம் . அனைத்து  மேற்சொன்னை காரணிகளையும் தகர்த்துவிடுகின்றது .
நாமும் முயற்சித்து பார்த்தல் என்ன ?
.

Comments

Popular Posts