Sweet Corn
விவசாயம் லாபகரமானது அல்ல !
இது பொதுவாக எல்லோரும் கூறுவதுதான்.
இதை உண்மை இல்லை என்று சொல்லமுடியுமா ?
என்னால் இயலும் !
நீங்க நமட்டு சிரிப்புடன் நையாண்டி செய்வது எனக்கு புரிகிறது.
நல்லது. இதை படித்துவிட்டு பின் தொடருங்கள்.
இயற்கை விவசாயத்தை முழுமையாக செய்து பார்த்தேன். அதில் நான் தேற இயலவில்லை. ஆனாலும் அதில் உள்ள பெருமைகளை விட மனமில்லை.
பின் ஒருங்கிணைந்த பண்ணையத்தை குத்தகைக்கெடுத்தேன். நிறைய பாடங்களை கற்றுக்கொண்டான்.
கோழிகள் வளர்ந்தேன் , பக்கத்து தோட்டதாருடன் மனஸ்தாபம்.
கீரிகள் அனுபவ பங்குதாரர் என்று உரிமைகொண்டாடியது. பின்வாங்கி விட்டேன்.
ஆடுகள் வளர்ந்தேன். தீவனம் பிரச்சினையை கொடுக்கும் என்றார்கள். எனக்கு அப்படி எதுவுமின்றி பண்ணை வளர்ந்தது.
விற்பனை என வந்தபோது வகையாக மாட்டிக்கொண்டேன். கையை கடித்தது. கை கழுவி விட்டேன்.
மாடுகள் உதவுமென்று இருமாந்தபோது அதுவும் தன்பங்கிற்கு பாடம் படித்தது.
கையிருப்பில் பெரும்பகுதி கரைந்தது. குடும்பத்தில் வசைபாடல் ஆரம்பம்.
இருந்தாலும் என்விவசாய ஆசை விடவில்லை. ' தொலைத்த இடத்தில் தான் தேடவேண்டும் ' என்றே
தோன்றியது. உற்பத்தியை கொஞ்சம் நிறுத்தி வைத்தேன். கொஞ்சம் சந்தை பக்கம் பார்க்க தொடங்கினேன்.
பப்பாளிக்கு நல்ல demand இருந்தது. குறித்துக்கொண்டேன்.
Sweet corn அடுத்து என்னை ஈர்த்தது. தோட்டத்துக்கு வந்தேன். வயல்களை தயாரிக்க தொடங்கினேன்.
கொஞ்சம் பப்பாளி பயிர் செய்தேன். தொடர்ந்து sweet corn பயிர் என்னோடு கை கோர்த்தது.
இங்கேதான் திருப்புமுனை. தினம் 20-30 கிலோ அளவுக்கு sweet corn விற்க முடிந்தது.
சில வியாபாரிகள் அறிமுகமானார்கள். இப்போது என்னால் அனைவருக்கும் கொடுக்க இயலவில்லை.
பப்பாளி கிலோ ரூ5/ க்கு எடுத்துக்கொள்ள சிலர் என்னை அனுகி உள்ளனர்.
இப்போது என் தினசரி விற்பனை ரூ1500/ ஐ தாண்டியுள்ளது. இது இன்னமும் கூட வாய்ப்பு தெரிகிறது.
இப்போது கூறுங்கள் , விவசாயம் லாபகரமானதா , இல்லையா?!நான் ஒரு விவசாயி என்ற திமிர் எனக்குண்டு !!!
நீதி :
கேட்பதை கொடுக்க ஆரம்பியுங்கள். இருப்பதை கொடுக்க கெஞ்சாதீர்கள்.
வாழ்த்துக்கள்.

SWEET CORN
~~~~~~~~~~~
இது 73- 85 நாள் பயிர். இதற்கு உரத்தேவையும் நீர் தேவையும் அதிகம். என் அனுபவத்தில் மிக லாபகரமான பயிர். சரியாக மார்கெட் வசதி செய்து கொண்டால் நல்ல வருமானம் கிடைக்கும்.
பயிரிடும் முறை:
----------------
மண் தூளாக நன்கு உழவு செய்து
நிறைய தொழுஉரம் இட்டு இறுதி உழவின் போது super phosphate 100kg/acre என்ற அளவில் இட்டு வயலை சமன் செய்து கொள்ளவும்.
1-1/2(45cm)அடி பார் அமைத்துக்கொள்ளவும்.
பாரின் ஒரு புறத்தில் ஒன்னறைஅடி இடைவெளியில் ஒரு குத்துக்கு இரண்டு விதைகள் (3cm depth) ல் ஊன்றவும். உடனடியாக நீர் பய்ச்சவேண்டும்.
விதை ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அளவிற்கு தேவைப்படும்.
மூன்றாம் நாள் அட்ராசின் களைக்கொல்லியை இட்டுவிடவும். அடுத்த நாள் உயிர் நீர் பாய்ச்சவும். ஐந்தாம் நாள் முளைப்பு தெரியும். ஒரு வாரம் கழித்து குழிக்கு ஒரு பயிர் இருக்கும்படி களைத்து விடுங்கள்.
பயிர் எண்ணிக்கையை பராமரிக்கவே இரண்டு விதைகள் ஊண்றப்பட்டது. இதில் பாடு நிரப்பல் சரிபடாது. பயிர் களைத்த உடன் நீர் பாய்ச்சவும். ஐந்து நாள் இடைவெளியில் நீர் பாய்ச்சவும்.
30வது நாள் 30கிலோ யுரியா கொடுத்து நீர் பய்ச்ச வேண்டும். களைகள் இருக்கும் பட்சத்தில் கை களையாக எடுக்கவும். ஏனெனில் இதன் வேர்கள் மேலாக இருக்கும்.
இதற்கு பின் நீர் பற்றாகுறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
40 வது நாள் யுரியா 30கிலோ , பொட்டாஷ் 50கிலோ கலந்து கொடுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
43 வது நாள் (13 இலைகள் ) மேலே பூ தோண்றும.
இந்த சமயம் போரான் 1% கரைசல் இலைகள் நனையும் படி அடித்தால் ஆண் பூவின் தரம் நன்றக இருக்கும்.
கதிர் முழுமையாக முத்துக்கள் உருவாகும். இதற்குபின் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது.
கோடை காலத்தில் 73வது நாள் அறுவடைக்கு வந்துவிடும். குளிர் காலத்தில் 80நாட்கள் ஆகும்.
இதை 10 நாட்களில் அறுவடையை முடித்துக்கொள்ள வேண்டும். சுமார் 10 000 கதிர்கள் கிடைக்கும்.
கிலோ ரூ15 முதல் ரூ20வரை விற்பனை ஆகிறது. மார்கெட் சரியான முறையில் செய்வதில் தான் வெற்றியே இருக்கிறது. 80 நாட்களில் சுமார் ரூ50000/ நிகர லாபம் பெறலாம்.
நான் தினம் 50 கிலோ கிடைக்கும் அளவிற்கு தொடர்ந்து பயிர் இடுகிறேன். தொடர்ந்து supply செய்வதால் சுலபமாக விற்க முடிகிறது. ஓர் ஆண்டுக்கு மேல் செய்து வருகிறேன். பங்குனி சித்திரை மாதங்களில் பயிரிடுவதை தவிர்க்கவும். அதிக வெய்யலில் சரியாக pollination நடைபெறாது. ஆகையால் முத்துக்கள் நிறைய இருக்காது. இது நம் வருவாயை உயர்த்தும். பயனடையுங்கள்.
அன்பு நட்புடன்,
காளிக் கவுண்டர் /FB
Comments
Post a Comment