மணத்தக்காளி





சிதம்பரம் சொந்த ஊராய்  கொண்டவர் நண்பர் அம்பிகாபதி பழனி . கீரை இனங்களை பற்றிய அவரது தொடர் இது .

Ambigapathi Palani/FB 
அன்புடையீர், வணக்கம்.தொடர்ந்து பல்வேறு வகையான கீரைகள் பற்றிய தொகுப்பினை முகநூல் வழியாக பகிர விரும்புகின்றேன். என்னால் பகிரப்படும் விவரங்கள் பல புத்தகங்களில் இருந்தும் ,இணையத்தள பதிவுகளில் இருந்தும்,பலரின் அனுபவத்தில் இருந்தும் தொகுக்கப்பட்டது மட்டுமில்லாமல் ,மலைகிராம பகுதிகள்,திறந்த வெளி பகுதிகளில் நேரடியாக கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டவையாகும்.இது ஆராய்ச்சி ஆய்வு அல்ல.படிக்கப்பட்டது,அனுபவப்பட்டது.
"மணத்தக்காளி"
மணத்தக்காளி-அற்புத ஆற்றல் பெற்ற கீரை என்று சொல்லலாம். இக் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்றுவரை மிகவும் வலிமையுடன் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.
இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மணத்தக்காளி கீரை. மணத்தக்காளி கீரைக்கு மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்களும் உண்டு.
மணத்தக்காளி ஒரு மீட்டர் உயரம் வளரும் செடி. இலைகள் பச்சை நிறமாகவும், பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். காய்கள் முதலில் பச்சை நிறமாகவும், பின்பு சிவப்பாகி கருமையாகும். காய்கள் கருமிளகு போல் இருப்பதால் இது மிளகு தக்காளி என்றும் அழைக்கப்படும்.
மணத்தக்காளி கீரையில் புரதம் (5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின் (3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) என ஏராளமான தாது உப்புகளும், உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.
மணத்தக்காளி கீரை-இத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்.
இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது.
மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள்
1) வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.
2) மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
3) தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
4)செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன் செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.
5) உடல் வெப்பம் அதிகம் இருந்தால் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணியும்.
6)காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.
7) காய்ச்சல் வந்தால் கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும் காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.
8)சருமத்தில் அலர்ஜி வெயில் கட்டி போன்றவை இருந்தால் அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.
9)சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அத்தகையவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால்இசிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
10)உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால் பிரசவம் எளிமையாக நடைபெறும்.
11) மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும்.
12)அதிகப்படியான களைப்பு உள்ளவர்கள் இரவில் படுக்கும் போது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடல் களைப்பை போக்குவதோடு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.
13) மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் வலிமையடையும்.
14) முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்

Comments

Popular Posts