எளியமுறையில் எலி கட்டுப்பாடு…





vegetable crop pictures க்கான பட முடிவுvegetable crop pictures க்கான பட முடிவுvegetable crop pictures க்கான பட முடிவு




எளியமுறையில் எலி கட்டுப்பாடு…

வயல்களில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைப் பற்றி இங்கே விளக்குகிறார் வேதாரண்யம் அடுத்துள்ள ‘கத்திரிபுலம்’ கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி  வேணுகோபால்…
ஆடு, மாடு, கோழி, எலி போன்ற விலங்குகளின் குடல் பகுதிகளைத் துண்டுத் துண்டுகளாக நறுக்கி, அவற்றை பிளாஸ்டிக் கலனில் இட்டு… மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரை ஊற்றி, 90 நாட்கள் மூடி வைத்திருக்க வேண்டும். இக்கலவைக்கு ‘குணபஸ்தலம்’ என்று பெயர். நடவு செய்த 30 முதல் 40 நாட்களில்… ஒரு ஏக்கருக்கு 50 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ‘குணபஸ்தலம்’ என்ற கணக்கில் கலந்து வரப்பு ஓரங்களில் ஊற்றி விட்டால், எலிகள் வராது. மாதம் ஒரு முறை இக்கலவையைத் தெளித்து வர வேண்டும். இது, ஆடு, மாடுகளையும் கட்டுப்படுத்தும்.

பப்பாளிக் காய்களைத் துண்டுகளாக வெட்டி, எலி வளைகள் இருக்கும் பகுதிகளில் வைத்தால், அதைச் சாப்பிட்டு, எலிகள் இறந்து போகும். தவிர, வரப்பு ஓரங்களில் புதினா செடி களை நடவு செய்தாலும் எலிகள் அண்டாது. தலா 100 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வறுத்துப் பொடியாக்கி… அதனுடன் 100 கிராம் வெல்லப்பாகு, 100 மில்லி நெய், 150 கிராம் சிமெண்ட் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மாத்திரை அளவுக்கு உருட்டி வரப்பு ஓரங்களில் இரண்டு முதல் மூன்று அடி இடைவெளியில் வைத்தால், அவற்றை எலிகள் சாப்பிட்டு இறந்துபோகும்.
Source: Pasumai Vikatan

Comments

Popular Posts