வாழையில் என்னென்ன ஊடுபயிர் செய்யலாம்?






வாழையில் என்னென்ன ஊடுபயிர் செய்யலாம்?
வாழை கன்று நடவு செய்யும்போதே ஊடுபயிர் செய்யலாம். கன்றுகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில் தட்டைப் பயிறு விதைக்கலாம். செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு, ஒரு வரிசை நடவு செய்யலாம். இந்த இரண்டு பயிர்களும் வாழை மரத்தை பாதிக்காது. கிடைக்கும் சூரியஒளியை வைத்தே வளர்ந்துவிடும். தட்டைப் பயிறும், செடிமுருங்கையும் காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும். தட்டைப் பயறு உயிர்மூடக்காவும் செயல்படும். இதன் இலைகள் கால் நடைகளக்கு சிறந்த உணவு. இந்த இரண்டு பயிர்களையும் வயலில் வாழை உள்ள வரை பயிரிட்டு வரலாம்.எனவே வாழையின் ஆரம்பகால வளர்ச்சி நிலையில் ஊடுபயிரிடுவது எளிது. முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், மிளகாய், கத்திரி, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வெண்டை, பேஸலா, டயுஸ்கோரியா, கீரை, பூசணி வகைகள், செண்டு மல்லி, பியூம்ரோஸ் (மரமல்லி) போன்றவை ஊடுபயிராக வாழையுடன் வளர்க்கப்படுகின்றன.
தென்னிந்தியாவில், பாக்கு, தென்னை மரங்களுடன் வாழை பல பயிர் சாகுபடி முறையும் பின்பற்றப்படுகின்றது. பழ வகைகளுக்கு வளரும் இளம் பருவத்தில் வாழை நிழல் தரு மரமாகப் பயரிடப்படும்.
குச்சி கிழங்கு/வாழை பயிரிடும் முறை முக்கியமான ஒன்றாகும். தனியே வாழை பயிரிடுவதை விட வெண்டையுடன் சேர்த்துப் பயிரிடுவது மிக அதிக இலாபத்தையும், வெண்டையைத் தொடர்ந்து, கொத்தவரை, அவரை போன்றவை நல்ல இலாபம் தரும் ஊடுபயிர்களாகும்.

Comments

Popular Posts