யூரியாவுக்கு மாற்றாக சில யோசனைகளை

யூரியாவுக்கு மாற்றாக சில யோசனைகளை

திருவாரூர் மாவட்டம், வீரமங்கலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மயில்வாகனன்… யூரியாவுக்கு மாற்றாக சில யோசனைகளை நம்மிடம் பகிர்ந்தார்.
”அரை லிட்டர் புங்கன் எண்ணெய், 100 கிராம் அரப்புத்தூள் அல்லது சீயக்காய்த்தூள், 100 கிராம் வசம்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதோடு 80 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளித்தால்… அடுத்த சில நாட்களில் பயிர் பச்சை பிடித்து செழிப்பாக வளரும்” என்றவர்,
”மீன் அமினோ அமிலம் கொடுத்தும் பயிரை உயிர்ப்பிடிக்கச் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் தலா ஒரு கிலோ மீன்கழிவு, வெல்லம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடி வைக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து, இதனை வடிகட்டினால், சுமார் கால் லிட்டர் மீன் அமினோ அமிலம் கிடைக்கும். இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெல்லுக்குத் தெளிக்கலாம். கரைசல் எடுத்த பிறகு எஞ்சியிருக்கும் கசடுகளில் இருந்து 10 நாட்கள் கழித்து மீண்டும் கால் லிட்டர் மீன் அமினோ அமிலக் கரைசல் கிடைக்கும். இந்தக் கரைசல் தயாரிக்க வழக்கமாக 20 நாள் தேவைப்படும். ஆனால் அவசர தேவைக்கு இப்படியும் தயாரிக்கலாம்” என்றார்.
நன்றி : பசுமை விகடன் -25 Nov, 2014

Comments

Popular Posts