Chennai Tramway
நன்றி: மோகன்ராஜ் கருபண்ண ஆசாரி -- முகநூல் பதிவு --ஜூன் 11ஆம் தேதி
அன்றைய கிழக்கிந்திய கம்பெனியால் ''மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வே'' ஆரம்பிக்கப்பட்டு இயங்கிய ட்ராம் வண்டி
மே 7, 1895இல் மதராஸ் நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்களாம்.
Comments
Post a Comment