E.M.






E.M திரவம் தயாரிப்பு முறை:
-------------------------------
இது ஒரு நல்ல பயிர்வளர்ச்சி ஊக்கியாகவும், சிறந்த நோய் விரட்டியாகவும் செயல் படும்.
ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்க தேவையான பொருட்கள் :
பப்பாளி 1kg,
பரங்கிக்காய் 1kg,
வாழைப்பழம் 1kg,
நாட்டுச்சக்கரை 1kg
முட்டை ஒன்று.
பழங்களை நன்கு கழுவி துடைத்தெடுத்துக்கொண்டு அவைகளை தோலோடு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளுங்கள்.
பின் ஒரு வாய் குறுகலான பிளாஷ்டிக் கேனை நன்கு சுத்தம் செய்து துடைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதனில் நறுக்கி வைத்த பழத்துண்டுகளை போட்டு பின் முட்டையையும் உடைத்து ஓட்டுடன் அதில் சேர்க்கவும். சர்க்கரையையும் சேர்த்து இந்த கலவை முழுகும்படி சுத்தமான நீரை சேர்த்து காற்று புகாமல் இருக்கமாக மூடி வைக்கவும்.
15 நாள் கழித்து திறந்து பார்க்கும்போது கலவையின் மீது வெண்மைநிறம் தோன்றியிருந்தால் EM நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று பொருள்.
அவ்வாறு இல்லை என்றால் மேலும் ஒரு கைபிடி சர்க்கரை சேர்த்து இறுக்கமாக மூடிவிடவும். அடுத்த 15வது நாள் ( 30வது நாள்) EM கலவை தயார்.
இதை 50ml/lt என்ற விகிதமாக கலந்து தெளிக்கலாம். அல்லது பாசனநீருடன் கலந்தும் விடலாம்.
இந்த கலவையை ஆறு மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.

Comments

Popular Posts