Marutha maram
மரங்கள் எல்லாமே நமக்கேற்ற
மரங்களா?
----------------------------------------------
வேங்கை மரத்தினை இன்றைக்கு பார்க்கமுடிவதில்லை இந்தமரத்தில் ஒரு குவளை செய்து அதில் நீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்புநிறமாகிவிடும்.
இந்த நீரைக் குடித்தால் சர்க்கரை நோய் சீராகும், இந்தமுறையை ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றைக்கும் பயன்படுத்துகிறார்கள்.
இலுப்பை மரத்தின் இலுப்பை எண்ணெய் தமிழர் வாழ்வில் நீண்ட காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் இது மருந்தானது.
மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைப் தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
இப்படியிருக்க வளர்ச்சி எனும்பெயரில்
சாலை விரிவாக்கம், நகரமய மாக்கல் என நமது மண்ணுக்குச் சொந்தமான மரங்கள் தயவு தாட்சண்யமின்றி வெட்டித் தள்ளப்படுவது ஒருபுறமிருக்க, விரைந்து வளர வேண்டும் என்பதற்காக, நமது மண்ணிற்கு துளியும் பொருத்தமில்லாத தூங்குமூஞ்சி, மயில் கொன்றை உள்ளிட்ட மரக் கன்றுகள் நடப்படுகின்றன.
இப்படி வளரும் மரங்களில் காய்கள்,
பழங்கள் எதுவும் வராது.
இம்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் பெரும் பாலான பறவைகள், விலங்குகள் இம்மரங்களை நாடுவதில்லை.
பறவைகளின் வருகை குறைந்ததால் பாரம்பரிய மரங்களான அத்தி, நீர்மத்தி, வேலம், புங்கன், நாவல், கருப்பாலை, இலுப்பை ஆகிய மரங்களின் இயல்பான இனப்பெருக்கமும் மட்டுப்பட்டது. அதற்குக் காரணம், பறவைகள் உண்ட பிறகு, அவற்றின் எச்சம் வழியாக வெளியேறும் விதையிலிருந்தே ஆரோக்கியமான கன்று முளைக்கும்.
அயல்தாவரங்கள் வறட்சியையும் தாங்காது சற்றுவேகமான காற்றடித்தாலே நகரவீதிகளில் எளிதில் முறிந்து விழுவதைத்தான் நாம் அடிக்கடி பார்க்கிறோமே...
நம் மண்ணிற்குச் சொந்தமான மரங்களில்தான் பல்லுயிர் சூழல் இருக்கிறது. சில பறவைகள் குறிப்பிட்ட சில மரங்களில் மட்டுமே கூடுகட்டும்.
சீமைக் கருவேல மரத்தை இறக்குமதி செய்ததன் ஆபத்தை அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான நாம் உணர ஆரம்பித்திருக்கிறோம். எப்படியும் அவற்றை அழிக்க முடியாமல் போராடிக்கொண்டி ருக்கிறோம்.
வரும் காலங்களில் இன்னும் இப்படிப் பல மரங்கள் நமது பல்லுயிர் பெருக்கத்துக்கும் மண்ணின் வளத்துக்கும் சவாலாய் வளர்ந்து நிற்கும்.
சூழலுக்கு சற்றும் ஒத்துவராத சமூக்ககாடுகள் எனும் பெயரில் வளர்க்கப்படும் தைலமரங்கள், தூங்குமூஞ்சினு விதவிதமான நம் மண்ணிற்கும் தட்பவெப்பத்திற்கும் ஒத்துப்போகாத மரங்கள் தான் இங்கே ஆக்கிரமித்திருக்கிறது.
இந்த மரங்கள் சீக்கிரம் வளர்ந்து விடும். அதிக நீரையும் உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய..
அதை நம்பி வாழ்கிற விலங்குகள் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது.
அயல்தாவர ஆக்கரமிப்பால் இன்றைக்கு நாம் பல ஆறுகளையே இழந்துநிற்கும் சூழல்...
இதெல்லாம் வளர்ச்சியல்ல வீழ்ச்சியே...
இனியாவது அயல்மரங்களை நடுவதை நிறுத்தி இயல்மரங்களின் பரவலுக்கு துணைநின்று
"இயல்பாக வாழ்வோம்"

Comments
Post a Comment