ஒப்பந்தப் பண்ணையமா? சமூகம் தாங்கும் பண்ணையமா?





#contract_farming
Pamayan
ஒப்பந்தப் பண்ணையமா? சமூகம் தாங்கும் பண்ணையமா?
அண்மையில் தமிழக அரசு ஒப்பந்தச் சாகுபடி அல்லது ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றம் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) என்ற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது கடந்த வாரம் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் கொடுக்கப்பட்டும் விட்டது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு தன்னை அறிவித்துக் கொண்டது. இந்தச் சட்டத்தை இவ்வளவு வேகமாக நிறைவேற்றியுள்ள தமிழக அரசு கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து இயற்கைவழி வேளாண்மைக்கான ஒரு கொள்கை வெளியிட வேண்டும் என்று தமிழக உழவர்களால் வேண்டப்பட்டும் இதுவரை எந்த நகர்வும் இல்லை. ஆனால் இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம், அவசரம்?
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக வேளாண்மையை பெருங்குழும(corporate company) முறைக்குள் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒப்பந்தச் சாகுபடிக்குள் இருக்கும் நோக்கம்தான் என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி. இந்தச்சட்டத்தின் முன்னுரையில் விளைபொருட்களை அதாவது கால்நடைகள் உட்பட, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் இரண்டு தரப்பாரும் அதாவது உழவர்களும் கும்பணிகளும் பயன்பெறும் வகையில் அமையும் என்று கூறப்பட்டுள்ளது. நடுவண் அரசின் சட்ட முன்வடிவில் உழவர்களை பலவீனமான பிரிவினர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற கூறு உள்ளது. ஆனால் தமிழக அரசின் சட்டத்தின் அந்தப் பார்வை குறைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஒப்பந்தச் சாகுபடியால் உண்மையில் உழவர்களுக்கு நன்மை கிடைத்துள்ளதா என்று பார்த்தால், அதற்கு இல்லை என்ற பதில்தான் இருவரை உலக அளவில் வந்துள்ளது. சில இடங்களில் உழவர்களுக்கு பணம் அதிகம் கிடைத்துள்ளது. ஆனால் அவர்களது கடன் அதிக அளவு உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஒப்பந்தப் பண்ணையம் என்பது பெருங்குழுமங்கள் தங்களது இடுபொருட்களையும், தொழில்நுட்பத்தையும் உழவர்கள் தலையில் கட்டிவிட்டு அதை அதிக உற்பத்தி என்ற போர்வையில் கண்முன் காட்டி பின்னர் கொல்லைப்புறம் வழியாகப் பிடுங்கிக் கொள்ளும் கூத்துதான் நடந்துள்ளது. தாய்லாந்தில் நெல் சாகுபடி செய்து இயல்பாக தங்களது வாழ்வியலை நடத்திச் சென்ற உழவர்களை கரும்பு விளைவிக்கலாம் அதிலும் அதிகம் விளைவிக்கலாம் என்ற ஆசை காட்டி அவர்களுக்கு வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் தலையில் கட்டி அவர்களைக் கடனாளியாக்கிதுடன், அவர்களது மண்ணையும் தண்ணீரையும் வீணாக்கினர். இதை உணவு வேளாண் நிறுவன ஆய்வு குறிப்பிடுகிறது. 50 முதல் 60 டன் (எக்டேருக்கு) விளைவித்து வந்த உழவர்கள் ஒப்பந்தப்பண்ணை முறைக்கு மாறிய பின்னர் 70 முதல் 75 டன் வரை அறுவடை செய்தனர். இதனால் அவர்களுக்கு 15 டன் அளவிற்கு கூடுதல் பணம் கிடைத்தது என்று அரசும், கும்பணியும் சொன்னது. ஆனால் அதற்கு முன்பு கடன் இல்லாமல் இருந்த உழவர்கள் அதன் பின்னர் பெரும் கடனாளியாக மாறிப்போனார்கள் என்பதுதான் கதை. இந்தக் கதை மறைக்கப்படுகிறது. பசுமைப் புரட்சி காலத்திலும் இந்தக் கதைதான் கதைக்கப்பட்டது. உற்பத்தி கூறியது, பணம் பெருகியது என்ற கதையாடல் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் உழவர்கள் கடனாளியாக மாறுவதுடன் தங்களது வேளாண்மை ஆதாரங்களான நீர் வளத்தையும் நில வளத்தையும் இழக்கின்றார்கள்.
இப்போது ஒப்பந்தக் சாகுபடிக்கு முனைப்பாக வந்துள்ள கும்பணிகள், பேயர் (மான்சாண்டோவை வாங்கியவர்கள்), பெப்சி, இமாலயா ஹெல்த் கேர், ஐடிசி, இந்துஸ்தான் யூனிலிவர் அத்துடன் அதானி குழுமம்
ஆக நமது உழவர்களின் புதிய கதையாடல் தொடங்க உள்ளது.
உண்மையில் ஒப்பந்தம் எப்படி இருக்க வேண்டும்?
சமூகம் தாங்கும் வேளாண்மையாக இருக்க வேண்டும். உழவர்களும் நுகர்வோர்களும் நேரடியாக இணைய வேண்டும். அதற்கு உதவியாக சிலர் இருக்கலாம். வரும் வருமானத்தில் 60 முதல் 70 விழுக்காடு உற்பத்தியாளராகிய உழவருக்குச் செல்ல வேண்டும். மீதமே மற்றவருக்குச் செல்ல வேண்டும். இந்த அறம் இல்லாத எந்தச் சட்டமும் உழவர்களுக்குப் பயன்படாது.
மேலும் வாசிக்க...
Rahul Chaturvedi,” CONTRACT FARMING AND FRITOLAY’S MODEL OF CONTRACT FARMING FOR
POTATO”,Potato J. 34 (1-2) : 16-19, 2007,Gneral Manager-Agro (R&D), PepsiCo India HodlingsPvt. Ltd.
(FritoLay Division) Global Business Park,M.G. Road, Gurgaon-122 002, Haryana, India.
[2]. Preetinder Kaur, “Contract Farming of Potatoes: A Case Study of PEPSICO Plant” , International Journal of
Scientific and Research Publications, Volume 4, Issue 6, June 2014 1 ISSN 2250-3153, Research Scholar,
Department, of Geography, Panjab University Chandigarh.
[3]. Meeta Punjabi,”The potato supply chain to PepsiCo’s Frito Lay”,Food and Agriculture Organization of the United
Nations (FAO).
[4]. “Potato Contract Farming –Win-Win Model forAgro
Processing”,http://www.fmpcci.com/pdf/Contract%20Farming.pdf
[5]. Parthapratim Pal ,“Contract farming in India: A Case study of potato cultivation”,Indian Institute of Management,
Calcutta,www.networkideas.org/ideasa…/jan15/ppt/PARTHAPRATIM_PAL.pptx
[6]. http://www.fao.org/ag/ags/contract-farming/faq/en/
[7]. http://www.ijsrp.org/research-paper-0614/ijsrp-p3040.pdf
[8]. https://en.wikipedia.org/wiki/Contract_farming
[9]. http://www.pepsicoindia.co.in/…/partnership-with-farmers.ht…
[10]. https://www.nabard.org/english/contract_farm.aspx
[11]. http://www.fao.org/ag/ags/contract-farming/faq/en/
[12]. http://www.ibnlive.com/news/india/contract-farming-the-key-

Comments

Popular Posts