இயற்கை கரைசல்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் தயாரிக்கும் முறைகள்



















Zero Budget Natural Farming:
 உதாரணத்திற்கு டீலக்ஸ் பொன்னி சாகுபடி பற்றிய பார்வையில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கும் பூச்சிக் கொல்லி விவசாயத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பாருங்கள்.
  

இயற்கை பூச்சி கொல்லிகள்:
1. தாவரப் பூச்சிக் கொல்லிகள்:
தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான
·         ஆடாதோடா,
·         நொச்சி,
·         எருக்கு,
·         வேம்பு,
·         சோற்றுக் கற்றாழை,
·         எட்டிக் கொட்டை
போன்றவற்றைக் கொண்டுவேக வைக்கும் முறையிலும்ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன.
ஊறல் முறை:
·         நொச்சி,
·         ஆடாதோடா,
·         வேம்பு,
·         எருக்கன்,
·         பீச்சங்கு (உண்ணி முள்),
 போன்றவற்றின் இலைகள் 2 கிலோஎட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும்இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும்இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.
வேக வைக்கும் முறை:
மேற்கண்ட இலைகள்எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு,15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும்வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும்.
ஆறியபின் அதில்ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு:
 மேற்கண்ட சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம்.
2. நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு:
·         சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ,
·         இஞ்சி 200 கிராம்,
·         இவற்றுடன் புதினா அல்லது
·         சவுக்கு இலை
கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்துசூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம்.
3. இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லி மருந்து-வேப்பங்கொட்டை சாறு:
கிலோ வேப்பங் கொட்டையை உரலில் இட்டு இடித்துசல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி,10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
4. இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி?
இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம்:
 தேவையான பொருட்கள் :
1.        பூண்டு – 300 கிராம்
2.       மண் எண்ணை 150 மிலி
பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும் 60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன் படுத்தலாம் 
5. இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி- பூண்டு -மிளகாய் கரைசல்
 செய்வது எப்படி?
·         பூண்டு 1 kg எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
·         பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
·         அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
·         பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்).
·         இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும்இப்போது நமக்கு 6லிட்டர் கரைசல் தயார்.
·         இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
·         காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.
·         இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும்கவனம் தேவை.
6. பெருங்காயம் பூச்சிகளை கட்டு படுத்தும்:
ஒரு ஏகர் நிலத்திற்கு, ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தால், நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்கு செல்கிறது.
இந்த முறையால், பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது.
7. இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்
·         சிறியாநங்கை கஷhயம்3to5%,பூண்டுஇஞ்சிபச்சை மிளகாய் கரைசல் அல்லது  5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தௌpத்து கட்டுப்படுத்தலாம்.
·         வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
·         வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தளிக்க வேண்டும்.
·         வேப்பங்கொட்டைத் தூளை 300_to_500 கிராம், 300 மில்லி மண்ணென்ணையில் 24 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தௌpக்க வேண்டும்.
·         10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்பின்னர் அதை 30நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
·         இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி,மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம்இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.
·         சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
·         சோற்றுக் கற்றழை சாறை தெளிக்கலாம்.
·         சாம்பல் தூவலாம்.
·         300 மில்லி வேப்ப எண்ணெய்,300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்
·         விளக்கு பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
8. பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்
வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும்பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன.
·         இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாகஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
·         இலை களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள்,தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை.
·         இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள்வீட்டு  மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன்மைகளை கொண்டுள்ளது.
·         இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
·         வில்வ விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்டதுஇதனை ஆய்வகச் சூழலில் வனமர இலை உண்ணிகளுக்கு எதிராக பயன்படுத்திப் பார்த்ததில்சாதகமான விளைவுகள் காணப்பட்டன.
·         இவற்றின் ஆய்வுமுடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எண்ணெய்தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வல்லது என கண்டறியப்பட்டது.
·         குறிப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும் இலையுண்ணி பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலுமாக இலைகளைத் தின்றுவிடும் அபாயம் உள்ளதுஇவை மரங்களைக் கொன்றுவிடுவதில்லைமாறாகமரத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறதுஇந்தியாவின் அனைத்து தேக்கு தோப்புகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை இவைஒரு ஆண்டில் எப்போது தாக்கும் என ஊகித்து அறிய இயலாதவை.  எனவே இந்த இலையுண்ணிகளை கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவாலாகும்.
9. அக்னி அஸ்திரம் - இயற்கை முறை பூச்சி கொல்லி:
தேவையான பொருட்கள் :
1.     கோமியம் 20 கிலோ
2.     புகையிலை 1 கிலோ
3.     பச்சை மிளகாய் 2 கிலோ
4.     வெள்ளைப்பூண்டு 1 கிலோ
5.     வேப்பிலை 5 கிலோ
இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்) 
வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும்.
அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.
100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.
10. நீம் அஸ்திரா:  பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :
1.     நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ
2.     நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்
3.     வேப்பங்குச்சிகள் மற்றும்
4.     வேப்ப இலை 10 கிலோ
இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.
இந்த கரைசலை எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும்?
குறைந்த பட்சம் அறுபது நாட்கள் வைத்திருக்கலாம்
11. சுக்கு அஸ்திரா: பூஞ்சாணக் கொல்லி
தேவையான பொருட்கள் :
1.     சுக்குத்தூள் 200 கிராம்
2.     பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர்
சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
12. பிரம்மாஸ்திரம் :  அசுவனி   பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :
1.     நொச்சி இலை 10 கிலோ
2.     வேப்பம் இலை 3 கிலோ
3.     புளியம் இலை 2 கிலோ
4.     கோமியம்   10 லிட்டர்
 இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம்.

மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது.
13.பீஜாமிர்தம்: வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்க
தேவையான பொருட்கள் :
1.     பசு மாட்டு சாணி கிலோ 
2.     கோமியம் 5 லிட்டர் 
3.     சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் 
4.     மண் ஒரு கைப்பிடி அளவு 
5.     தண்ணீர் 20 லிட்டர் 
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.

விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பயன்கள் :

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்கப்படும். 
14. வேம்பு புங்கன் கரைசல்: பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :- 
1.     வேப்பெண்ணை - ஒரு லிட்டர் 
2.     புங்கன் எண்ணை - ஒரு லிட்டர்
3.     கோமியம் (பழையது) -  பத்து லிட்டர் 
4.     காதி சோப்பு கரைசல் - அரை லிட்டர் 
இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி
15. மாவுப்பூச்சி அழிப்பது எப்படி?
·         இயற்கை எதிரிப்பூச்சிகளாக பொறி வண்டு ஏக்கருக்கு 500 வண்டுகளை தோட்டத்தில் விடவேண்டும்.
·         வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவிகிதம் தெளிக்க வேண்டும்.
·         பச்சை மிளகாய் 250 கிராம்இஞ்சி 250 கிராம்பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து 300 மிலியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்
இயற்கை உரம்:
11.  அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை
நிலவள ஊக்கி ஆன அமிர்த கரைசலை தயாரிக்கும் முறை:
·         மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்ஒருமுறை பெய்த மூத்திரம்இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம்ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
·         24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும்.
·         அமிர்த கரைசல் தயார்.
22.  பஞ்சகாவ்யா தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள் :
1.   மாட்டு சாணம்,
2.       மாட்டு சிறுநீர்,
3.       மாட்டுப்பால்,
4.       தயிர் மற்றும்
5.   நெய்
 
1. முதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும்
2. அதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும்
3. அதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும்
4. இரண்டு லிட்டர் புளித்த தயிரை சேர்க்கவும்
5. அரை கிலோ பசும் நெய் சேர்க்கவும்
Additionally:
  •  இந்த கூட்டில், மூன்று தேங்காய் இளநீர் சேர்க்கவும்.
  • ஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது அழுகிய வாழை பழம் சேர்க்கவும்
  • சிறிது சுண்ணாம்பை (slacked lime) சேர்க்கவும்
  • கையளவு உயிர் மண்ணை (living soil) சேர்க்கவும்
  • கையளவு வெல்லம் சேர்க்கவும்
இந்த திரவத்தை, வேப்பம்குச்சி ஒன்றால் நன்றாக கலக்கவும். தினமும் திறந்து, சில நேரம் கலக்கவும். 20 நாட்களுக்கு பின் பஞ்சகாவ்யா  ரெடி. அதன் பின் பஞ்சகவ்யவை உபயோகம் செய்யலாம். 30-50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் சேர்க்கலாம்
33.    தசகாவ்யா தயாரிப்பு முறை
தசகாவ்யாஒரு அங்கக தயாரிப்பு.
இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா என்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்கும்.
இதனை பக்குவமாகக் கலந்து செடிகளுக்கு இட்டால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு தசகாவ்யாவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அவை
1.   Thumbai chadi
2.   கொலின்ஜி (டெப்ரோசியா பர்ப்யூரியா),
3.   உமதை (டட்டுரா மிட்டல்),
4.   எருக்கம் (கேலோடிராபிஸ்),
5.   நொச்சி (விட்டெக்ஸ் நெகுண்டோ),
6.   புங்கம் (பொங்கேமியா பின்னட்டா),
7.   காட்டாமணக்கு (ஜட்ரோபா கர்கஸ்),
8.   அடத்தோடா (அடத்தோடா வேசிகாமற்றும்
9.   வேம்பு(அசாடிரக்ட்டா இன்டிகா),
10.   பஞ்சகாவ்யா
இதனை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிராக செயலாறு இயக்கியாகப் பயன்படுகின்றது.
·         தாவர வடிசாரை தயாரிக்க தனியாக மாட்டு சிறுநீர் 1:1 விகிதத்தில் (1கிலோ நறுக்கிய இலைகள் 1 லிட்டர் மாட்டு நீரில்தழைகளை முக்கி 10 நாட்களுக்கு முக்கி வைக்கவும்.
·         வடிகட்டிய அனைத்து வகையான தாவர சாரை ஒவ்வொரு 5 லிட்டர் பஞ்சகாவ்யா கரைசலில் 1 லிட்டர் என்ற அளவில் சேர்க்கவும்.
·         இந்தக் கரைசலை 25 நாட்களுக்கு வைத்து நன்றாகக் குலுக்கவும்.
·         அந்த நேரத்தில் பஞ்சகாவ்யா மற்றும் தாவர வடிசாரை நன்றாகக் கலக்கவும்.
பயன்படுத்தும் முறை
·         தசகாவ்யா கரைசலை வடிகட்டவும்இல்லையெனில் தெளிப்பானின் நுனியில் அடைப்பு ஏற்படும்.
·         3% தழை தெளிப்பானாக பரிந்துரைக்கப்ட்டது.
·         செடியை நடவு செய்வதற்கு முன் 3% தசகாவ்யா கரைசலில் விதைகள் அல்லது நாற்றுகளின் வேர்களை 20 நிமிடங்கள் முக்கி வைத்தால் விதை வளர்ச்சி மற்றும் வேர் உருவாகுதல் அதிகமாக இருக்கும்.
·         அனைத்து காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்கள் வளரும் போது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
நன்மைகள்
·         செடியின் வளர்ச்சிமகசூல் மற்றும் பயிரின் தரம் அதிகமாகும்.
·         அசுவுணிசெடிப்பேன்சிலந்தி மற்றும் இதர உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.
·         இலைப்புள்ளிகள்இலைக்க கருகல்சாம்பல் நோய் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த உதவும்.
·         குன்றுகளில் இருக்கும் பயிர்களில் உள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்காக
   4.     ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?
தேவையான பொருட்கள்:
  1. நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ)
  2. நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம்,
  3.  வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர்,
  4.  இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) (பவுடராக அல்லது
    முளைக்கட்டச்செய்து அரைக்கப்பட்டதாக இருப்பது அவசியம்)
  5. பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும்
  6. தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
தயாரிப்பு முறை:
இவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.
பயன்படுத்தும் முறை:
ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.
     5.     பழகரைசல் :

இது பயிர்களுக்கு நல்ல ஊட்டசத்து மருந்தாக செயல்படுகிறது .
தேவையான பொருட்கள் :
௧.அமில தன்மை அற்ற கனிந்த பழம் ( பப்பாளி , நெல்லி , கொய்யா , வாழை, பனம் ,...) 10 கிலோ 
௨. நாட்டு மாட்டு சிறுநீர் 1 லிட்டர் 
செய்முறை :
பழத்தை சுமார் 15 லி கொள்ளவுள்ள பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடிவிடவும், 2 நாள் கழித்து மா மூத்திரத்தை ஊற்றி நன்கு கலக்கி விடவ
ும் . தினமும் நன்கு கலக்கி விடவும் . 30 நாள் கரைசல் தயார் .
பயன் பாடு :
௧. இதனை 1 :10 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு கொடுக்கலாம் .
௨.இதனை ஜீவமிர்தடிற்கு மாற்றாக பயன் படுத்தலாம் .
௩.பயிர்களின் நோயெதிர்ப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் .
௪.பழ குப்பைகளுக்கு சிறந்த மறுசுழற்சி முறை .
6.  அரப்பு மோர் கரைசல்: ஜிப்ராலிக் ஆசிட் 

பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.

இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.
  1. அரப்பு இலைத்தூள் - ஒரு லிட்டர்
  2. இளநீர் - ஒரு லிட்டர் 
  3. புளித்த மோர் - ஐந்து லிட்டர்

அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும்.  ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்.
7.  தேமோர் கரைசல்
  1. புளித்த மோர் - 5 லி
  2. இளநீர் - 1 லி
  3. 10 தேங்காய்களின் துருவல்
  4. அழுகிய பழங்கள் 10 கிலோ 

இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.

1
ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

It iequivalent to  Biozyme & Cytozyme
8.  Archae பாக்டீரியா கரைசல்:தொல்லுயிரி கரைசல் - பயிர் ஊக்கி
  1. புதிய சாணம் 5 கிலோ
  2. தூள்வெல்லம் முக்கால் கிலோ
  3. கடுக்காய்த்தூள் 25 கிராம் 
  4. அதிமதுரம் இரண்டரை கிராம்
50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார்.

200
லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் - 1 ஏக்கர்
10
லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம்
archae
பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும்.
இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்
     9.  அசோலா - இயற்கை உரம்


அசோலா வளர்ப்பு டிப்ஸ்
§  மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
§  செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும்.
§  புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்
§  அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.
§  சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ சலித்த செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.
§  புதிய சாணம் 2 கிலோ மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
§  மேலும் தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.
§  500 – 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
§  ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
§  தினமும் 500 கிராம் அசோலா அறுவடைக்கு புதிய சாணம் 1கிலோ மற்றும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.
§  மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை இட்டால் அவை அசோலாவில் தாது உப்புகளின் அளவை அதிகரிக்கும்.
§  மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
§  10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
§  அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.
கால்நடை ஒன்றிற்கு
அசோலாவின் அளவு
(நாள் ஒன்றிற்கு)
பால்மாடு, உழவு மாடு
1-1.5 கிலோ
முட்டை  மற்றும்
இறைச்சி கோழி,
வான்கோழி
20-30 கிராம்
ஆடு
300-500 கிராம்
வெண்பன்றி
1.5-2.0 கிலோ
முயல்
100 கிராம்
சத்துப்பொருள்
அசோலா தீவனம்
அசோலா இல்லாத தீவனம்
சத்துப்பொருள் அதிகரிப்பு
முட்டையின் எடை
61.20
57.40
6.62
ஆல்புமின் (கிராம்/100கி உண்ணும் பகுதி)
3.9
3.4
14.70
குளோபுலின்
(கிராம்/100கி உண்ணும் பகுதி)
10.1
9.5
6.13
புரதம்
14.0
12.9
8.52
கரோட்டீன் (மைக்ரோகிராம்/100 கி உண்ணும் பகுதி)
440
405
8.64
10. தானியக் கரைசல் தயாரிப்பது எப்படி
தேவையான பொருள்கள் :
1.     உளுந்து -100 கிராம் 
2.     பச்சைப் பயறு -100 கிராம்
3.     காராமணி -100 கிராம்
4.     கொண்டைக்கடலை -100 கிராம்
5.     கொள்ளு -100 கிராம்
6.     எள்-100 கிராம்
7.     கேழ்வரகு அல்லது கோதுமை -100 கிராம்
தயாரிப்பு முறை :
முதல் நாள் எள்ளை மட்டும் தனியாக ஊறவைத்து .துணியில் கட்டி முளைக்கட்ட வைக்க வேண்டும் .மறுநாள் மீதி அனைத்துத் தானியங்களையும் ஒன்றாகக் கலந்து முளைக்கட்ட வைக்க வேண்டும் முளைக்கட்டிய பிறகு ,அனைத்தயும் விழுதாக அரைத்து 10 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் கலந்து ,200 லிட்டர் தண்ணீர் சேர்த்து , ஜீவாமிர்தத்தைக் கலக்குவது போல் கலக்கி விட வேண்டும்.இதை 24 மணி நேரம் கழித்து பயன்படுத்தலாம்.
11. திறன் நுண்ணுயிர் எப்படி தயாரிப்பது
தேவையான பொருட்கள்
1.     10-க்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளின் வேர் பகுதி மண் அரை கிலோ
2.     பரங்கிப் பழம் 2 கிலோ
3.     பப்பாளிப் பழம் 2 கிலோ
4.     சாராய வெல்லம் 1 கிலோ
5.     நாட்டுக்கோழி முட்டை 2 அல்லது 3, 
6.     குடிநீர் தேவையான அளவு
7.     வாய் அகன்ற பிளாஸ்டிக் பாத்திரம் 20-30 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 
தயாரிப்பு முறை:
நன்கு செழிப்பான, நோய் தாக்கமில்லாத 10 வகையான மரம், செடி, கொடி வகைகளின் வேர்ப்பகுதியிலிருந்து வேர் மற்றும் மண்ணை சேகரித்துக்கொள்ள வேண்டும். 1 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து 500 கிராம் வீதம் 10 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து மண்ணை சேகரிக்கலாம். இதனை பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்து கொண்டு, பரங்கியும், பப்பாளிப்பழம் மற்றும் சாராய வெல்லம் ஆகியவற்றை பிசைந்து போடவேண்டும். பிறகு நல்லநீரை மண், பப்பாளி, பரங்கி, வெல்லம் ஆகியவை மூழ்கும் வரை ஊற்றவேண்டும். பிறகு முழு நாட்டுக்கோழி முட்டையை அதனுள் போடவேண்டும். பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு மூடி, நிழலில் வைக்க வேண்டும். காற்றோட்டத்துக்காக காலையிலும், மாலையிலும் பிளாஸ்டிக் பாத்திரத்தை திறந்து மூடவேண்டும்.

 30
நாள்களுக்குப் பிறகு திறன் நுண்ணுயிரி கலைவையை பயன்படுத்தலாம். 6 மாதம் வரை இக்கலவையை பயன்படுத்தலாம்.
திறன் நுண்ணுயிர் எப்படி பயன்படுத்துவது
பயன்படுத்தும் முறை:
பாதிக்கப்பட்ட தென்னையின் அடிப்பாகத்தில் மூடாக்கு எனப்படும் முறையை பயன்படுத்தி (தென்னை ஓலை அல்லது மட்டையால் வேர் பகுதியை மூடுதல்) அதன்மேல் நுண்ணுயிரி கலவையை ஊற்ற வேண்டும். (30 லிட்டர் நீருடன் 1 லிட்டர் திறன் நுண்ணுயிரி கலந்து தெளிக்கலாம்). இக்கலவையை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதனால் இடுபொருள் செலவு குறைவு, ஈரப்பதத்தை கட்டுப்படுத்துதல், குறைவான கூலி, காய்களின் நிறம், வடிவம், அளவு மற்றும் சுவை அதிகரிப்பு. பஞ்சகவ்யம் மற்றும் திறன் நுண்ணுயிரி கலவை வாடல் நோயால் மரம் பாதிக்காத வகையில் காக்கும் என்றார்.
12. கனஜீவாமிர்தம்: 
தேவையான பொருட்கள் :
1.     நாட்டு மாட்டுச் சாணம்-100 கிலோ
2.     மாட்டுச் சிறுநீர்-10 லிட்டர்
3.     வெல்லம்-2 கிலோ
4.     சிறுதானிய மாவு-2 கிலோ 
ஆகியவற்றை நன்றாகக் கலக்கி மண்தரையில் பரப்பி, நிழலில் உலர வைத்து, பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். தூளாக, உள்ள கன ஜீவாமிர்தம், பயன்படுத்த எனக்கு எளிதாக இருக்கிறது. உருண்டையாக பிடித்து வைத்தும் பயன்படுத்தலாம். தேவைப்படும்போது 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரை அதன் மீது தெளித்து, ஈரப்படுத்திக் கொண்டு பயன்படுத்தலாம்.
13. பல்வகை பயிர் தொழில் நுட்பம்
தானியப்பயிர் 4
சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ

பயிறு வகை 4
உளுந்து 1 கிலோ
பாசிப்பயறு 1 கிலோ
தட்டைப்பயிறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ

எண்ணை வித்துக்கள் 4
எள் 1/2 கிலோ
கடலை 2 கிலோ
சூரியகாந்தி 2 கிலோ
ஆமணக்கு 2 கிலோ

பசுந்தாள் பயிர்கள் 4
தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பை 2 கிலோ
நரிப்பயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ

மணப்பயிர்கள் 4
கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும்.
மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.
14. லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்: பயிர் ஊக்கி
தேவையான பொருட்கள் :
1.     அரிசி அலம்பிய கழுநீர்
2.     நாட்டு மாட்டுப்பால்
அரிசி அலம்பிய கழுநீரை மூடியுடன் கூடிய ஒரு பாத்திரத்தில் பாதி அளவுக்கு நிரப்பி காற்று பத்திரத்திற்குள் போய் வருமாறு லேசாக மூடி வைக்க வேண்டும். அறையின் வெப்பநிலை இருபது முதல் இருபத்தைந்து டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். ஏழு நாட்களில் இந்த நீர் புளித்து அதில் இருந்த உமி பிரிந்த மேற்பரப்பில் ஆடை போல படர்ந்து இருக்கும். அதை ஒரு வடிகட்டி மூலம் அகற்றி விட வேண்டும். வடித்து வைத்திருக்கும் புளித்த நீரில் அதைப்போல பத்து மடங்கு பாலை சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும். கெட்டு தட்டி போன  மாவு, புரதம் மற்றும் கொழுப்பு பொருட்களை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தை கலந்து மூடி வைக்கவும். இந்த கலவை சாதரணமாக நிலவும் அறை வெப்பத்திலேயே கெட்டு போகாமலிருக்கும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம் 

நூறு மில்லி ரசத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். நாட்டு பசுமாட்டு பால் சிறந்த பலனை தரும். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது.
இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும்.
15. முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி
தேவையான பொருட்கள் :
  1. முட்டை - 10
  2. எலுமிச்சை சாறு
  3. வெல்லம் - 400 கிராம் 
பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.
16. ஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி?
·          நீர்வாழ் களையான ஆகாயத்தாரமரையை அந்த களையில் இயற்கை எதிரியும்உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியுமான கூண் வண்டானது (நியோசெட்டினா ஜகார்னியே புரூகிகளைகளின் இலைகளை உண்டு சேதம் ஏற்படுத்துகின்றன.
·         கோலியஸ் அம்பானிக்கல் என்ற கற்பூரவல்லி மருத்துவ தாவரத்தின் காய்ந்த துகள்களை பயன்படுத்துவதால் இதில் உள்ள வேதிப்பண்புகள் ஆகாயத் தாமரையின் வேரின் வழியாக எளிதில் உறிஞ்சப்பட்டு களைகளை அழிக்கின்றன.
·         எனவே இந்த இரண்டு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளையும் ஒருங்கிணைந்துமுதலில் வண்டுகளை ஆகாயத் தாமரை பாதித்த நீர்நிலைகளில் விடுவித்து 15 அல்லது 20 நாள்களுக்கு பின்னர் கற்பூரவல்லி தாவரத்தின் இலைகளை பொடியாக்கி அவற்றை நீரில் கரைத்து 30 சதவீத கரைசலை ஆகாயத் தாமரையின் மேல் தெளிப்பதன் மூலம்கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
·         இந்த முறைகளுடன் புல் கெண்ணை என்ற மீன் ரகத்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
17. ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு
·         கேவிஐசி (KVIC) எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் “”கலன்களை அறிமுகம் செய்துள்ளது.
·         சாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
·         இயற்கை உரம் அதிக நார் தன்மை கொண்ட தண்டு பகுதிகளை ஆகாயத்தாமரை கொண்டிருப்பதால் இயற்கை அங்கக உரம் தயாரிக்க முடியும் என்பதும் நிரூபணமாகி உள்ளது.
·         முதல் 3 மாதங்களில் நன்கு மக்கும்ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது.
·         சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது.
தொடர்புக்குஎம்.அகமது கபீர்,  வேளாண்மை ஆலோசகர்,61, ஆர்.கே.ஆர்.நகர்தாராபுரம்திருப்பூர்-638 656. அலைபேசி எண்:  09360748542.
18. கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்:
தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை  - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்

செய்முறை :-
சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.

மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.
References:
3.     http://agasool.blogspot.in 
  நன்றி முகநூல் பதிவாளர்கள்

Comments

Popular Posts