ஜே.சி.குமரப்பா

* நிலைத்த பொருளாதாரம்*-ஜே.சி.குமரப்பா

"அடுத்த மனிதன் வீழ்ச்சியடையும்படியாக அமையக் கூடிய தவறை ஒருபோதும் செய்யாதீர்"

" எந்தப் பணியை ஒருவன் செய்தாலும் தன்னுடைய செயலால் ஏற்படக்கூடிய சமூக விளைவை எண்ணிப்பார்க்க வேண்டும்"

போன்ற ஆழமான படிப்பினையின் விளைவாக ஜே.சி.குமரப்பா'வின் பொருளாதார கொள்கைகள் அரசியல், சமூகம், அறம் , ஆன்மீகம் பொதிந்த எளிமையும் வலிமையுமான "நிலைத்த பொருளாதாரத்தை" வழங்கியுள்ளார்.

மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் நெறியையும் , அன்பும் அறமும் ஆன்மீகமுமாய் வாழும் உன்னதத்தையும்.. மகிழ்வையும்.. மறந்து போன தற்கால சமூகத்தின் நெருக்கடி மிகுதியான நுகர்வு வெறியால் வேட்டையாடப்பட்ட சமூகத்தை அப் பிணியிலிருந்து பக்குவமாய் குணப்படுத்தும் அருமருந்தாக "நிலைத்த பொருளாதாரம்" இன்று தேவைப்படுகிறது. மகாத்மா காந்தியின் வார்த்தைகளிளே சொல்லுமாயின் ஜே.சி.குமரப்பா "தெய்வீக தன்மையின் மருத்துவர்" எனவும் "கிராமக் கைத்தொழில் மருத்துவர்" எனவும் பட்டம் சூட்டி பெருமிதப்பட்டார் .

"மனிதன் என்பவன் செல்வத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் வெறும் இடைத்தரகன் அல்ல ; தான் வாழும் சமூகத்தின் அரசியல், சமுதாய, அற, ஆன்மீகப் பொருப்புகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய உறுப்பினன் என்ற வலிய கருத்துகளின் வழியே
இன்று பொருளாதார சிக்கலில் புரையோடிப்போன இச்சமூகத்தின் அறியாமையை நீக்கிட... தற்சார்பை நோக்கி நகர்ந்திட... வாழ்ந்திட.... தக்க சமயத்தில் "நிலைத்த பொருளாதாரம்" என்னும் படைப்பை தன் சகாக்களின் துணையோடு அயராத உழைப்பின் மூலமும் வேட்கையின் வழியே சமர்பித்திருக்கிறார் என் சத்தியத்தின் சமமான நண்பன் "பூபாலன்".
'பனை' பூபாலனின் பயணம் " ஐயா நம்மாழ்வாரால் " அசீர்வதிக்கப்பட்டது... "குக்கூ சிவராஜ்" அண்ணாவாலும் "இயல்வாகை அழகேஸ்வரி" அக்காவாலுமு அரவனைக்கப்பட்டது... சபர்மதி'யில் அண்ணலை சந்தித்து அரவனைக்கப்பட்ட 'ஆயத்த மனிதன்' ஜே.சி.குமரப்பா'வை போல்.

- இரா.வெற்றிமாறன்

Comments

Popular Posts