Puliyankottai
விவசாயி
கோபிநாதன்/FB
புளியம்பழப்
பருவம்...
கிராமங்களில்
1 முதல்
4♪5♪6 மனுக்களை
வாங்கித் தோலுரித்துப்
பழத்தைக் காய வைத்து பிசுபிசுப்பு
சற்று காய்ந்தவுடன் புளி
தனியாகவும் கொட்டை தனியாகவும்
பிரித்துப் புளியை உப்புக்
கல்லுடன் புரட்டி பானையிலோ
பிளாஸ்டிக் வாளிகளிலோ
வருடத்திற்குத் தேவையான
புளியைப் பக்குவப்படுத்தி
வைப்பார்கள்.
புளியை
பக்குவப்படுத்தி விட்டு
கொட்டையை சிலர் பல்லாங்குளி
விளையாடுவதற்கு எடுத்து
வைத்தது போக ரோட்டில்
கொட்டுவார்கள்.
சிலர்
படி 5 ரூபாய்க்கு
விலைக்குப் போடுவார்கள்.
மணல் கலந்த செம்மண் பூமியை சபிக்கப் பட்ட பூமி என்று என் பெரியப்பா கூறுவார். என்ன தான் நுண்ணுயிரியை அதிக அளவில் அந்த மண்ணில் விட்டாலும் மண்ணில் தங்காது. குப்பையும் கூலமும் அந்த மண்ணுக்கு அதிகம் வேணும். அப்பதான் கொஞ்சம் தங்கும். இயற்கை வழியாக மூடாக்கிட்டு மண்ணின் தரத்தை மாற்ற முடியும். நம்ம ஆட்களுக்குத்தான் பொருக்காதே. உடனே உழவு பன்னி நிலத்த காய வச்சிடுவாங்களே. மண்ணின் தரத்தை மாற்ற சிலர் குளத்து மண்ணைப் போடுவார்கள். குளத்து மண்ணு விலை கேட்டா பக்குன்னு இதயம் அடைச்சுக்கும். என்னடா புளியங்கொட்டைக்கும் செம்மண்ணுக்கும் சம்பந்தமில்லாம பேசறானே கிறுக்குப் பயன்னு நினைக்கின்றீரா..
சம்பந்தப் படுத்திக்க வேண்டியது தான்..
புளியங்கொட்டையை வியாபாரிகள் வாங்கிப்போய் அரைத்து மாவாக்கி சர்க்கரை, பார்மாலின், குளுகோசு, சோடாசுண்ணாம்பு சில விகிதங்களில் கலந்து பசையாக்குவார்கள்.(இது ஒரு குடிசைத் தொழில்). பசை பலதுக்கும் பயன்படும். நாம் இந்தக் கொட்டையை உரலில் ஒன்றுக்கிரண்டாக இடித்து ஒரு கிலோ கொட்டைக்கு அரைக் கிலோ நாட்டுச்சர்க்கரையும் கைப்பிடி சுண்ணாம்புத்தூளும் 5 லிட்டர் தண்ணீரும் கலந்து கொதிக்க விட்டால் நமக்கு பசை போன்ற திரவம் கிடைத்து விடும்.
தோட்டத்துக்கு அமுதக் கரைசலை பாசனம் செய்யும் பொழுது இந்தக் புளியங்கொட்டைக் கலவையை கரைசலில் கலந்து விடவும். இவ்வாறு அடிக்கடி கலவையை விடவிட மண்ணின் தன்மை மாறும்.. அமுதக்கரைசலில் வரப்பு மண் கலப்பதை விட காலையில் புற்று மண் ஈரமாக இருக்குமே அந்த மண்ணைக் கலப்பது சிறப்பாக இருக்கும்..
மனிதனுக்கு சாதி என்னும் இரசாயணத்தை இரத்தத்தில் கலந்து விடுவது போல மண்ணில் இரசாயணத்தைப் போட்டு மண்ணின் உயிர்ப்பை போக்கியாச்சு. இனி மனிதம் என்னும் அமுதத்தை இரத்தத்தில் புகுத்தி அன்பை நிலைபெறச் செய்வது போல மண்ணில் குப்பை எனும் அமுதைச் சேர்த்து செழிப்பாக்குவோம்..
ஏதோ நாட்டுக்கு சொல்வோம்...
மண்ணின் தன்மை உடனே மாறலைன்னு நொங்கெடுக்காதீங்கப்பா. நான் பாவப்பட்ட சென்மம்... படித்த பின் லைக் போடுங்க. படிக்காதயே சிலர் போட்டுடறாங்க
Comments
Post a Comment