தமிழர் வேளாண்மையில் வரப்பு


No photo description available.
No photo description available.



No photo description available.




தமிழர் வேளாண்மையில் வரப்பு :
தமிழர் வேளாண்மையை ஐயா ஞானபிரகாசம் சொல்லிக்கொடுக்கிறார், மேலும் திருக்குறளில் இருந்தே பலவிசயங்களை மேற்கோள் காட்டுகிறார், விரிநீர் வியன் உலகம் மற்றும் நீரின்றி அமையாது உலகு போன்றவை நீரை வரப்பெடுப்பதன் மூலம் பூமியின் உட்செலுத்தி செயற்கையாக விரிவடைய வைத்தனர், பூமி விரிவடைவதை நேரில் கண்டவுடன் ஆச்சரியம் தாளவில்லை, 5 அடி இருந்த வரப்பு மழை நீரை வயலில் நிறுத்தி 2 மாதங்களுக்கு பிறகு வரப்பு 2 அடியாக மாறிவிட்டது, நீர் உட்சென்ற உடன் நீர் அருந்திய வயிறு போல உப்பி மேலே வந்து விட்டது, இதனாலேயே தமிழர் மரபுவழி வேளாண்மை சிறந்தது.
1. வரப்பை 45° சரிவில் வெட்ட...மழைநீர் முழுவதும் வயலுக்கு செல்கிறது. வரப்பு இருகுவதால் எலிகள் வலை குறைகிறது.
2. வரப்பை உயர்த்துவதால் மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாறுகிறது-வயல். நீர் ஆவியாகி காற்றின் போக்கும் மாறுவதால் Micro-climate சாதமாக மாறுகிறது... அது நுண்ணுயிர் பெருக்கத்திற்க்கு வழிகோலுகிறது.
3. உரத்தை வரப்பில் வைத்து மண்மூடுவதால்...மழைநீரில் உரம் கரைந்து வயலுக்கு செல்கிறது...வரப்போர பயிர்களுக்கு வலுசேர்கிறது. வரப்புமூலம் வருமானமும் பெருகுகிறது.
வரப்பு அமைக்கும் முறை :
நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இருந்து 3அடி உயரத்திற்கு அமைத்து, 5லிருந்து 10அடி அகலம் வரை எடுக்கலாம் அத்துடன் நாலு பக்கமும் உள்முகம் 45 கோணத்தில் சரிவாக அமைக்க வேண்டும்.
வரப்பு மாடல், உட்பக்கம் 45 டிகிரி சரிவானது, இந்த படத்தில் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் சரிவான கரை உள்ளது, பண்டைய தமிழர் நீர் சேமிக்கவே நெல்லை கண்டுபிடித்தார்கள், "நெல்லுக்கு நீரை கட்டு" என்பது பழமொழி, சரிவான வரப்பின் நன்மைகள், வயலில் நீர் நிறுத்தி நீரை சேமிக்கலாம், நீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை, நெல் எவ்வளவு நீரையும் தாங்கி கொள்ளும், களை முளைக்காது, எலி வயலில் இருக்காது, நீர் பூமியின் உள்ளே சேமிக்கப்பட்டு புவி வெப்பம் தணியும்.
வரப்பு மாடல், வரப்பில் காய்கறி, மரப்பயிர்களை பயிருக்கு தேவையான இடைவெளி விட்டு வைக்கலாம், வரப்பு பபயிர்களுக்கு தனிப்பட்டமுறையில் நீர்பாசனம் தேவையில்லை, நெல்வயலில் உள்ள நீரின் ஈரப்பதமே போதுமானது, கிழக்கு / மேற்கு பக்கம் பெரிய மரங்கள் இல்லாமல் இருந்தால் சூரியஓளியை அறுவடை செய்யமுடியும்
வரப்பு காற்று தடுப்பானா செயல்பட்டு புவி வெப்பத்தை வெளிவிட்டு பூமியை குளிரச்செய்து, அதிகப்படியான குளிர்ச்சி நீர் திவலைகளை உருவாக்கி நிலத்தடி நீரை அதிகரிக்கும், மழை இல்லாமலே நீரை உருவாக்கும் அற்புதமான விசயம், பல்லடம் பண்ணையில் 10 ஏக்கர் வரப்பெடுத்த பிறகு கண்டறிந்த விசயம், கோவை மற்றும் பல்லடம் பகுதியில் உள்ளவர்கள் அங்கு சென்று உறுதிபடுத்திக் கொள்ளலாம்
வரப்பிலுள்ள மண் மட்டுமே இருகும், அதுவும் மேல் மண் மட்டுமே, உட்புறம் தொழுஉரம் உள்ளதால் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் அது வரப்பு பயிர்களை பாதுகாக்கும், வயலினுள் மண் வெண்ணைய் போல் இளக்கமா இருக்கும், இது அனுபவத்தில் தெரிந்து கொண்டது
தொழு உரம் மண்புழு உரமாக மாறி மழைக்காலங்களில் உரம் கலந்த சாறாக - ஜூஸ்-வயலுக்கு ஒடி வரும். காரணம் வரப்பு நம் வயலின் உட்பக்கமாக சரிவாக இருக்கிறது. இரண்டாவது வயலில் நீர் குறையும் காலங்களில் உரத்தை உண்ட மண் புழுக்கள் நீர் இன்மையால் வயலின் கீழ் ஈரம் தேடி லட்சக்கணக்கில் பயணிப்பதால் அந்த மண்புழு உரம் நேரடியாக வயலுக்கு கிடைக்கும்,
மண்ணில் ஈரம் தாங்கு தன்மை அதிகரிக்கும்.. மண்ணில் உரிய தேவையான தட்பவெட்ப சூழ்நிலை உருவாகும்..இந்த தட்பவெட்ப சூழ்நிலைக்கே உரிய நுண்ணுயிர் வாழும் திரன் அதிகரிக்கும்..நிலதிறன் அதிகரிக்கும்.. நீர்மேலாண்மை மேம்படும்..
குலையாத உறுதியான வரப்பு உருவாகும்..எனவே ஆட்திறன் மேம்படும்..வரப்பு பொடியாது...
உலகின் தலையாய பிரச்சனை புவி வெப்பமயமாதல் அதனால் பருவநிலை மாறுபாடு, வெப்பத்தை நீரை கொண்டே தணிக்கமுடியும், புவி மையத்தில் இருந்து வரும் வெப்பம் மற்றும் சூரிய வெப்பம் இதனால் ஏற்படும் வெப்பத்தாக்கத்தை நிலத்தடி நீரை தணித்து நீராவியாக வெளிவந்து வளிமண்டலத்துக்கு சென்று குளிர்ந்து மழையாக பொழிகிறது, தற்போது நிலத்தடி நீரை அபரிமிதமாக உறிஞ்சியதா வெப்பத்தை தணிக்க நீர் இல்லாமல் போய்விட்டது, நீராவிப்போக்கு இல்லாததால் பருவமழையும் பொய்க்கிறது, தமிழர் வேளாண்மையின் வரப்பு வயிலில் உள்ள நீரை பூமிக்குள் மட்டுமே செலுத்தும் புவிஈர்ப்பு விசையால், மேலும் வரப்பு காற்று தடுப்பாக செயல்பட்டு புவி வெப்பம் சீராக தங்கு தடையில்லாமல் வெளியேற வழி செய்யும்.
ஓன்னு புரிஞ்சிக்கோங்க இங்க நம்ம பயிரையும் பாதுகாக்கிறோம், நீரையும் நிலத்தினுள் இறக்கி நீர் ஆதாரத்தையும் பாதுகாக்கிறோம், எக்காலத்திலும் நீர் பற்றாக்குறை வராத மாதிரி செய்யுறோம், மேலும் பயிர்களுக்கு அடிக்கடி நீர் பாசனம் பண்ண தேவையில்லை
முகுந்தனூர் கூட்டுபண்ணையில் 5 முறை மட்டுமே நீர் கட்டினோம், மழை நீரிலேயே அறுவடை முடிந்து விட்டது, மேலும் ஜனவரி 26 அன்று நடந்த அறுவடை 10 நாட்களுக்கு முன்பு தேங்கி இருந்த நீரை வெளியேற்றி அறுவடை செய்தோம், அங்கு 60 அடியில் இருந்த போரில் முன்பு போரில் அரை தண்ணியே வந்தது, தற்போது போரில் முழு அளவில் வருகிறது, ஏனெனில் நீரை அதிகப்படியாக நிலத்தில் சேமித்திருக்கிறோம்
நஞ்சை நிலத்திற்கும் புஞ்சை நிலத்திற்கும் வடிவமைப்பு சிறிது மாறுபடும், நஞ்சையில் வைத்த நீர் மண்ணில் உறிஞ்சப்பட நாளாகும், புஞ்சையில் உடனே உறிஞ்சப்பட்டு விடும், மேலும் பயிரை பாதிக்காத அளவு நீரை தேக்கலாம், அதிக நீர் எனில் வடித்து விடலாம், அதற்காக ஓரு குழாய் அமைப்பு வரப்பு எடுக்கும் போது அமைக்க வேண்டும்
நன்செய், புன்செய் நிலத்தில் எந்த பயிர் செய்தாலும் வரப்பு ஓரங்களில் செடிகள் மற்றும் புற்கள் இருக்ககூடாது.ஏனென்றால் சிறுபயிர்களை வரப்பில் உள்ள பூச்சிகள் பயிர்களுக்கு நோய்களை உண்டாக்கும். ஆகையால் வரப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மேலும் வரப்பை மண் சேர் கொண்டு மெழுக வேண்டும்.அப்பொழுதுதான் இளம் பயிர்களுக்கு பூச்சிகளின் பாதிப்பும், நோய்களும் இல்லாமல் நன்கு வளரும்.
அகலமான, உயரமான வரப்புகளுக்கு நுரம்பு எனப்படும் மணல் கல் துகள்கள் கொண்டு மூடவேண்டும்.
இது எங்கள் தாத்தா,பாட்டி, அப்பா,அம்மா சொன்ன அறிவுரை ஆகும்.பூச்சிகளின்தாக்கமும், நோய்களின் தாக்குதலும் இன்றி இருக்கும்.
புஞ்சை / நஞ்சை நில வடிவமைப்பு:
3 அடி உயரம் 3 அடி அகல வரப்பை அமைத்து உட்பக்கம் குளக்கரை போல சரிவா எடுத்துக்கொண்டால் வயலில் வைக்கும் நீர் பக்கவாட்டு அழுத்தத்தில் உறிஞ்சப்படாது, நெல் வயலில் வைத்த நீர் அதிகநாட்கள் வயலில் இருக்கும், உயரமான வரப்பினால் காற்று வயலில் உள்ள நீரை தூக்கி செல்லாது, புஞ்சை நிலத்துக்கு உட்பக்கம் வரப்பின் விளிம்பில் 1 அடி டிரெஞ்சு எடுக்கவும் இது அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும், மழை நீர் மற்றும் வயலில் வைக்கும் நீரில் 80%க்கும் மேலாக நமது நிலத்தின் அடியில் சேமிக்கப்படும் நன்றி
உர மேலாண்மை: நஞ்சை நிலத்தில் தொழு உரத்தை வரப்பு சரிவில் வைத்து அதன் மீது சிறிது மண்ணை போட்டு விடவும், இந்த உரம் தொடர்ந்து 3/4 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும்
உரமேலாண்மை: புஞ்சை நிலத்திற்கு தொழு உரத்தை எக்கருக்கு ஓரு டிப்பர் என்ற அளவில் மாதம் ஓருமுறை கலக்கமாக போடவும், நிலம் பொழபொழப்பு கொடுத்து நீர் பிடிப்பு தன்மை அதிகமாகும் பயிர்கள் நன்கு வளரும்
களை கட்டுப்பாடு: நஞ்சை நிலத்தில் எப்போதும் நீரை கட்டி வைத்தால் களை வராது
புஞ்சை நிலத்தில் உரமிடப்பட்ட வயலில் பயிரோடு சேர்ந்து களையும் நன்கு வளரும், நிலம் பொபொலவென இருப்பதால் களையை கையால் பிடுங்கி அங்கயே போடலாம் அல்லது அப்புறப்படுத்தலாம், களை கொத்தி பயன்படுத்தக்கூடாது, களைகொத்தி மீண்டும் மீண்டும் களைகளை வளரச்செய்யும்
எத்தனை மழை என்று தெரியவில்லை, போன டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடவு போட்டது, தோராயமாக இருமழை கிடைத்திருக்கலாம், முக்கியமான விசயம் என்னன்னா வரப்பை பெரிதாக்கி உட்பக்கம் சரிவாக அமைத்தால் வயலில் வைக்கும் நீர் பலநாட்கள் இருக்கும் இது அனுபவ உண்மை, இந்த வரப்பு என்ற ஓரு விசயத்தை மட்டுமே என் அனுபவத்தில் இருந்து பரிந்துரைக்கிறேன், மற்ற விசயங்களை உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம், எப்பவுமே நீர் வயலில் இருந்து கொண்டு இருந்தால் களை முளைக்காது
ஒவ்வொரு ஏக்கர் வரப்பு உயர்த்திய நிலமும் ஒரு மேக உற்பத்திக் கூடமாகவும் நீர் உற்பத்திக் கூடமாகவும் புவியின் வெப்பத்தைக் கடத்துகின்ற வெம்பக்கடத்தியாகவும் பருவக்காற்றுகளை உண்டு பண்ணும் பருவக்காற்று உற்பத்திக் கூடங்களாகவும் கடல் மட்டத்தை தாழ்த்தி நிலமட்டத்தை உயர்த்தும் தாங்கு தூக்கிகளாவும் ( ஜாக்கி) ஐந்திணைகளை காக்கும் மற்றும் வழி நடத்தும் அரசாகவும் செயல்படுகிறது.
தமிழர் வேளாண்மை இயற்கை வேளாண்மைக்கு எதிரானது அல்ல, தமிழர் வேளாண்மையை இயற்கை வேளாண்மையின் நல்ல அம்சங்களோடு சேர்த்து செய்து கொள்ளலாம், வேளாண்மையில் வேலையை குறைக்கும் எண்ணம் உள்ளவர்கள் தமிழர் வேளாண்மையை மட்டுமே செய்யலாம் ....
நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன.
மழை நீர் அறுவடை
கார்த்திகை ஐப்பசி மாதத்தில் பெய்யும் மழை நீரை அப்படியே நமது நிலத்தில் அறுவடை வரை கட்டி வைத்து மழை நீரையும் அறுவடை செய்யலாம். 1ஏக்கரில் 1அங்குலம் மழை நீரை நிறுத்தினால் அது 110டன் ஆகும் அப்போ 1அடி 2அடி மழை நீரை நமது நிலத்தில் நிறுத்தினால் எவ்வளவு நீரை நாம் அறுவடை செய்யலாம்? இந்த முறையில் செய்யும் பொழுது நிலத்தில் கட்டி வைத்திருக்கும் நீர் பூமிக்குள் உட்புகுந்து நிலத்தடி நீர் மட்டத்தை நமது நிலத்தடியில் உயர்த்தும். சீரான நீராவி போக்கு இருப்பதால் பருவமழையை மீண்டும் பொழிய வைக்க வல்லது.
நஞ்சையில் புஞ்சை
1ஏக்கரில் 75% நிலத்தை நஞ்சையாகவும் 25% நிலத்தை புஞ்சையாகவும் (வரப்பு எடுத்து) பயன்படுத்தலாம்… வரப்பில் 35தென்னை, 100வாழை, 20வகையான பழமரங்கள் அத்துடன் முருங்கை, ஒதியன், நுணா, அத்தி, இலுப்பை, புளியமரம், வேம்பு, புங்கை, பூஅரசு, நாட்டு கருவேல் மரங்களும் வளர்கலாம் மற்றும் கீரை காய்கறிகள் என எல்லாம் அதில் செய்யலாம்.
இதுக்கும் மேலே செய்யலாம், தென்னைக்கு நடுவே காட்டு மரம். உள் வரிசையில் மா, பலா, அத்தி, அதற்கு அடுத்து கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, நாரத்தை, கொலுமிச்சை, நெல்லி,சீதா மற்றும் கிழங்கு வகைகள், நிழல் இடங்களில் வல்லாரை, புதினா. கிடைக்கும் இடங்களில் பூ செடிகள், மூலிகை செடிகள், உயிர் வேலியாக காட்டு மரங்கள் நடுவே கலாக்காய். சாத்தியப்பட்டால் மரங்களில் மிளகு, வெற்றிலை, திப்பிலி கொடிகள்.
மழை வரவழைக்க:
வரப்பு எடுத்தால் மழை வரும். மழை இல்லாத ஊர்களில் தங்கள் நிலங்களில் இந்த முறையில் வரப்பு அமையுங்கள் 1-2 ஆண்டில் நீங்களும் மழை நீரை அறுவடை செய்யலாம்.
இந்த முறையில் வேளாண்மை செய்யும் பொழுது காலப்போக்கில் நஞ்சையை விட வரப்பு பயிர்களின் லாபம் அதிகரிக்கும்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்றும் ஒளவைப் பாட்டி விளக்குகிறார்.
அனைத்திற்குமான நிரந்திர தீர்வு…
1) நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த…
2) பருவ மழையை பொழிய வைக்க…
3) தண்ணீர் தட்டுபாட்டை போக்க…
4) நீடித்த வேளாண்மையை செயல்படுத்த…
5) அதீத உழைப்பில்லாமல் வேளாண்மையை செய்திட…
6) அதீத செலவில்லாமல் வேளாண்மை செய்திட…
7) களையை கட்டுபடுத்த…
8) மக்காத கழிவுகளைகூட எளிதாக மக்கவைத்து உரமாக பயன்படுத்த…
9) இரசாயணமில்லா மரவுவழி வேளாண்மையை செயல்படுத்த…
10) இயற்கை இடுபொருள் கொடுக்க வேண்டிய தேவையில்லை…
11) பூச்சிவிரட்டி அடிக்க தேவையில்லை…
12) மழையை வரவழைக்க…
13) மழைநீரிலேயே பயிரை அறுவடை செய்யும் முறை…
இதெல்லாம் சாத்தியமென்றால் அது தமிழர் வேளாண்மையால் மட்டுமே முடியும்.
இந்த பதிவு முழுவதும் Raja Durai அண்ணா பதிவு செய்ததுங்க, மிக்க நன்றிங்க அண்ணா....திரு.ஞானபிரகாசம் ஐயாவிற்கும் மிக்க மிக்க நன்றிங்க ஐயா

Comments

Popular Posts