மண் வள மேம்பாடு அனைத்து வகை மண் களுக்கும்:

மண் வள மேம்பாடு அனைத்து வகை மண் களுக்கும்:
பல்வகைப் பயிர் வளர்ப்பு
இயற்கையான முறையில் ஊட்டங்களை நிறைவு செய்வதற்கான முதல்படி பல்வகை பயிர்வளர்ப்பாகும். அதன்படி நிலத்தை 200 நாட்களில் வளம் ஏற்றிவிட முடியும். வேதி உப்புக்களால் வளமிழந்த நிலத்தையும் வளமூட்ட முடியும்
தவசம் (தானியம்) வகையில் ஏதாவதுநான்கு
எ.கா.
சோளம் - 1 கிலோ
கம்பு - ½ கிலோ
தினை - ¼ கிலோ
சாமை - ¼ கிலோ,
பயறுகள் (பருப்புகள்) வகையில் ஏதாவது நான்கு
உளுந்து - 1 கிலோ
பாசிப்பயறு - 1 கிலோ
தட்டைப்பயறு - 1 கிலோ
கொண்டக்கடலை- 1 கிலோ
எண்ணெய்வித்துகள் வகையில் ஏதாவது நான்கு
எள் - ½ கிலோ
நிலக்கடலை - 2 கிலோ
சூரியகாந்தி - 2 கிலோ
ஆமணக்கு - 2 கிலோ
பசுந்தாள் பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு
தக்கைப் பூண்டு - 2 கிலோ
சணப்பு - 2 கிலோ
நரிப்பயறு - ½ கிலோ
கொள்ளு - 1 கிலோ
மணப்பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு
கடுகு - ½ கிலோ
வெந்தயம் - ¼ கிலோ
சீரகம் - ¼ கிலோ
கொத்தமல்லி - 1 கிலோ

மேலேகூறிய ஐந்து பயிர்களையும் வளர்த்து 50-60 ஆம் நாளில் மடக்கி உழுதால் அதில் கிடைக்கும் ஊட்டங்கள் சமச் சீரானதாகவும் நுண்ணூட்டக் குறைபாடு இல்லாதவாறும் இருக்கும். நிலம் வளமேறிவிடும். இதன் மூலம் மண்ணில் இருந்து எடுப்பதை மண்ணிற்கே பலமடங்காக்கி உயிர்க்கூளமாகக் கொடுக்கிறோம்.

Comments

Popular Posts