பெவேரியா பேசியானா

பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள் :
ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது.
பூச்சிகளை அழிப்பதில் பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான பூச்சிக் கொல்லி முக்கியமானதாகும்.
பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி எந்தெந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வளவு பயன்படுத்துவது?
கட்டுப்படுத்தும் பூச்சிகள்:
•பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி நெல், இலை சுருட்டுப்புழு, இலைப் பிணைக்கும் புழு, கொம்புப் புழு, கூண்டுப்புழு, குட்டை கொம்பு வெட்டுக்கிளி, முள் வண்டு, புகையான் மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
• தக்காளியில் பழத்துளைப்பானை கட்டுப்படுத்தும்.
•மணிலா, பருத்தி வகைகள், சூரியகாந்தி, பச்சை மிளகாய், கனகாம்பரம், கேந்தி மலரில் தோன்றும் பச்சைப் புழு(ஹலியாதிஸ்) மற்றும் புரடீனியா புழு (ஸ்போடோட்டீரா) ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
•பருத்தியில் உள்ள அனைத்து காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு, கரும்பு தண்டுத் துளைப்பான்கள், தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூண்வண்டு ஆகியவைகளையும் கட்டுப்படுத்தும்.
•கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பானுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
• மாமரத்தில் தோன்றும் இலை மற்றும் பூ பிணைக்கும் புழுக்கள், தேக்கு மரத்துளைப்பான், வாழை கிழக்கு கூண் வண்டு மற்றும் தண்டு கூண் வண்டு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
பயன்படுத்த வேண்டிய அளவுகள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்

Comments

Popular Posts