விவசாயம்_சிறுகதை..
ஏரகம் கிருபா உழவன் கிருபா #விவசாயம்_சிறுகதை ...... அடங்கி ஆரவாரமில்லாமல் இருந்தது ஏமாளிப்பட்டி கிராமம். திண்ணையில் இருந்த நாற்காலியில் தாத்தா குமாரசாமி அமர்ந்திருந்தார். உள்ளிருந்து அப்பா ராமசாமி முகத்தை துடைத்தவாறே வெளியே வந்தார். ஏப்பா ராமசாமி உழவுக்கு வண்டி வரச்சொன்னமே வந்துருச்சா..... தாத்தா கேட்டார். இன்னும் வரலப்பா, காலையிலேயே போன் பண்ணுனேன். வர்றன்னுதான் சொன்னாங்க...... அப்பா அமைதியாய் பதில் சொன்னார். மறுபடியும் போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேளுப்பா. டீசலுக்கு பணம் இல்லைனு சொன்னா போய் பணம் குடுத்து டீசல் புடிச்சிகிட்டு வரச்சொல்லு. மெயின் ரோட்டுல எங்கேயாவது வண்டிய மறிச்சிருந்தாலும் நீ நேர்ல போயி விவரம் சொல்லி கூட்டிட்டு வா..... தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அப்பா கிளம்ப ஆயத்தமானார். பாட்டி மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு வந்துகொண்டிருந்தார். தாத்தாவின் அடுத்த கேள்வி பாட்டியின் பக்கம் திரும்பியது. செல்லம்மா........ ஆளுங்க வந்துட்டாங்களா? வந்துட்டாங்க...... களை எடுக்க நாலுபேரை அனுப்பிட்டு காய் அறுக்க நாலு பேரை போகச்சொல்லியிருக்கேன். டீத்தண்ணி வைச்சு எடுத்துகிட்டு நானும் போகண