தரிசு நிலத்தில் சோற்றுக்கற்றாழை சாகுபடி..


தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை சாகுபடி...!
சோற்றுக் கற்றாழை சாகுபடி...!
🌵 சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிர் ஆகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் சாகுபடி செய்யலாம்.
ரகங்கள் :
🌵 குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை என கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பயிரிடப்பட்டு வருவது குர்குவா கற்றாழை ஆகும்.
ஏற்ற தட்ப வெப்ப நிலை :
🌵 இது வெயில் காலத்துக்கு ஏற்ற பயிராகும். வறட்சிப் பிரதேசங்கள் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயர மலைப்பிரதேசங்களிலும் இது பயிரிடப்படுகிறது.
ஏற்ற மண் :
🌵 தரிசுமண், மணற்பாங்கான நிலம், பொறைமண் போன்றவை இதற்கு ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
ஏற்ற பாருவம் :
🌵 இப்பயிரை வருடத்துக்கு இரண்டு பருவங்களில் பயிரிடலாம். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரம், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் இது பெருமளவில் பயிரிடப்படுகிறது.
தோற்றம் :
🌵 இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்தில், 30 முதல் 60 செ.மீ. நீளமாக சிறிய முட்களுடன் இருக்கும்.
நடவு முறை :
🌵 கற்றாழையை தனிப்பயிராக பயிரிடும்போது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் தேவைப்படும். நிலத்தை இரண்டு முறை உழுது, ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்கு செடிகளுக்கிடையே 3 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
🌵 சோற்றுக் கற்றாழையை வாழை சாகுபடியில் பக்க வாழையை எடுத்து நடுவது போன்றே பயிரிட வேண்டும். பத்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். சொட்டுநீர் பாசனம் இந்த பயிருக்கு உகந்தாகும்.
🌵 அதாவது தாய்ச்செடியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வயதுடைய பக்கக்கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவுள்ள கன்றுகளை தேர்ந்தெடுத்தல் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை சாகுபடி (பகுதி-2)...!
சோற்றுக் கற்றாழை சாகுபடி(பகுதி 2)...!
நேற்றின் தொடர்ச்சியாக இன்று சோற்றுக் கற்றாழை சாகுபடியில் உள்ள நன்மை பராமரிப்பு, உரங்கள் மற்றும் அறுவடை பற்றி பார்ப்போம்.
நன்மை :
சோற்றுக் கற்றாழை அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.
இதுதவிர மூலிகை சோப்பு, ஷாம்பு, மருந்து, மாத்திரைகள் தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பெருமளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழை செழித்து வளர்ந்தால் கீற்றுகள் ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் 1 கிலோ எடை வரை பருமனாக இருக்கும்.
பராமரிப்பு :
களைகள் அதிகம் தேங்கவிடாமல் பார்த்துக் கொண்டால் உரம் போடத் தேவையில்லை. ஓரளவு சாண உரம் இட்டால் போதும். ஒரு முறை சோற்றுக் கற்றாழை நட்டால் ஓராண்டுக்கு பலன் கொடுக்கும். 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை அதன் கீற்றுகளை மட்டும் அறுவடை செய்யலாம்.
மருத்துவக் குணம் மிக்க சோற்றுக் கற்றாழைக்கு பு+ச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. தண்ணீர் வசதியில்லாத கரடுமுரடான இடங்கள், பாறைகள் சு+ழ்ந்துள்ள இடங்கள் சுண்ணாம்பு பாறைகள் சு+ழ்ந்துள்ள பகுதிகளில் கூட சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும். இந்த சோற்றுக் கற்றாழை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பலன் கொடுக்கும் பயிராக உள்ளது.
உரங்கள் :
வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து இடுவது அவசியம். இதனால் கூழ் அதிக அளவில் கிடைக்கும்.
கற்றாழையில் அதிக பு+ச்சித் தாக்குதல், நோய்கள் தோன்றுவதில்லை. நீர்த் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இதற்கு நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இலைகள் முற்றும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். இதனால் இலையில் தரமான கூழ் கிடைக்கும்.
அறுவடை :
நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவபடுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை கிடைக்கும். இலைகளில் 80 முதல் 90 சதவீதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து கூழை பிரித்தெடுக்க வேண்டும்.
மண்ணின் வளமே..
மக்களின் வளம்..!

Comments

Popular Posts