மண் வளம் மேம்படுத்துதல்
மண் வளம் மேம்படுத்துதல்
பல வகை தானிய பயிர்கள்தானியப்பயிர் 4
சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ
பயிறு வகை 4
உளுந்து 1 கிலோ
பாசிப்பயறு 1 கிலோ
தட்டைப்பயிறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ
பசுந்தாள் பயிர்கள் 4
தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பை 2 கிலோ
நரிப்பயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ
மணப்பயிர்கள் 4
கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ
இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும்.
மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.
விளக்கம் :
இந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் .
இது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் காக்க படும் . இதனை கலந்து விதைக்கலாம் .
நவ தானியங்கள் விதைப்பு நமது பரம்பரியமுறை . எடுத்துக்காட்டு நமது முளைப்பாரி திருவிழா .
மேலும் இது இரு அருமையான பசுந்தாள் உரமும் ஆகும் .
// மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு //
இதில் சொல்லப்பட்டுள்ளது
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு சரியான விளக்கம் என்று எண்ணுகிறேன் .
இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திக்கு உண்டானது .
source: http://www.pannaiyar.com
Comments
Post a Comment