" பழம் அறுவடை நுட்பம் "







" பழம் அறுவடை நுட்பம் "

எந்தப் பழத்தை, எப்போ எப்படி சுலபமா அறுவடை 
செய்யலாம் என்பதை பற்றி பெரியவங்க நிறைய 
விடயங்களைச் சொல்லி வெச்சுருக்காங்க.

சப்போட்டா:
 
சப்போட்டா மரத்துலயே இருந்தா பழுக்காது.  
அறுவடை செஞ்சு நாலு நாள் கழிச்சிதான் பழுக்கும்.
பூ பூத்ததிலிருந்து 110 முதல் 120 நாள்ல அறுவடை 
செஞ்சுடணும். பார்க்கறதுக்கு உருளைக்கிழங்கு 
மாதிரி நிறம் தெரியும்போது அறுவடை செய்யலாம்

மாம்பழம்:
பூ பூத்ததிலிருந்து 160 நாள்ல மாம்பழ அறுவடை 
செய்யலாம்.
காம்புப் பகுதியில குழிவா இருக்கும். காய் நல்லா 
திரண்டு இருக்கும். இந்த அறிகுறியெல்லாம் 
தெரிஞ்சதும், தரையில காய் விழாதபடிக்கு 
அறுவடை செய்யலாம்.
கீழ விழுந்துட்டா, அடிபட்ட இடமெல்லாம் ரெண்டு,  
மூணு நாள்ல கருப்பாயிடும்.

கொய்யா:
 
கொய்யாவைப் பொருத்தவரைக்கும் பூ பூத்த பிறகு  
100-ம் நாள்ல காயை அறுவடை செய்யலாம்.
கரும்பச்சை நிறத்துல இருந்த காயோட நிறம்,  
வெளிர் பச்சையாகி, மஞ்சள் நிறமா மாறும் போது 
அறுவடை செய்யலாம்.
ஒவ்வொரு காயிலயும் ரெண்டு இலை விட்டு 
அறுவடை செய்தால் சந்தையில நல்ல விலை 
கிடைக்கும்

எலுமிச்சை:
 
எலுமிச்சைப் பழத்தை எப்படி அறுவடை 
செய்யணும்னு நீங்க மரத்தை பார்க்க வேணாம்.  
பழம் பழுத்தா தானே கீழே விழுந்துடும்.
சமயத்துல எலுமிச்சைக்கு நல்ல விலை கிடைக்கும்.  
அந்தச் சமயத்துல காய் மஞ்சள் நிறத்துக்கு மாறுற 
மாதிரி தெரிந்தால் அறுவடை செய்யலாம்.

நெல்லி 
மத்த பழங்கள் மாதிரி அறுவடைக்கான அறிகுறி 
நெல்லியில தெரியாது.
பூ பூத்ததிலிருந்து 150-ம் நாள் அறுவடை செய்யலாம்.  
நெல்லிக்காயை கையில எடுத்துப் பார்த்தா உள்ள 
இருக்கற கொட்டை திரட்சியா தெரிஞ்சாலும் 
அறுவடைக்கான அறிகுறினு முடிவெடுக்கலாம்
நெல்லியோட வழக்கமான புளிப்பும்,  

துவர்ப்பும்  குறைஞ்ச மாதிரி தெரிஞ்சாலும் 


அறுவடைக்கான நேரம்னு தெரிஞ்சுக்கலாம்.


Comments

Popular Posts