இயற்கை காய்கறிகள் உற்பத்தி. பகுதி :1 & 2


இயற்கை காய்கறிகள் உற்பத்தி.
பகுதி :1
-------
இயற்கை இடுபொருள்களுடன் காய்கறிகள் உற்பத்தி செய்வதுகுறித்து
திரு சுந்தர ராம ஐயர் அவர்களின் வழிகாட்டுதல் பற்றி என்னால் புரிந்துகொண்டவரை உங்களோடு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
தவறுகள் தென்பட்டால் திருத்துங்கள்.
முதல் வேலையாக பலதானியம் விதைப்பு. இதில் 16 வகைகள் அடங்கும்.
ஒரு ஏக்கருக்கு 20-30 கிலோ விதைப்பு செய்யவேண்டும். களைகள் அதிகம் முளைக்கும் வயல்களில் மேலும் அதிகம் விதைப்பு செய்வது நல்லது.
பூத்தநிலையில் மடக்கி உழவு செய்து அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டும்.
இயற்கை இடுபொருள்களை தயாரிக்க தேவையான பொருள்கள் :
1. தரமான தெளிப்பான் ஒன்று,
2. 200 lt டிரம் இரண்டு,
3. 100 lt டிரம் இரண்டு,
4. 20 lt டிரம் மூன்று,
5. 10 lt டிரம் ஒன்று,
6. 5lt டிரம் ஒன்று,
7. 2 lt டிரம் மூன்று,
8. ஒரு லிட்டர் பாட்டில் 20.
இவைகளை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.


இயற்கை காய்கறிகள் உற்பத்தி :
பகுதி:2
--------
வயலின் மேல்மட்டமண் மட்டுமே விவசாயத்துக்கு வழி செய்கிறது. மேல் மட்டத்தில் இருந்து 11" அளவுக்கான மண்ணில் தான் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இந்த மண்ணில் 10% அளவுக்காவது நுண்ணுயிர்கள் இருந்தால் மட்டுமே அது உயிரோட்டமுள்ள மண்ணாக கருதப்படுகிறது. சற்று விரிவாக சொல்ல வேண்டுமானால் , ஒரு ஏக்கரில் இந்த மேல்மட்ட மண் சுமார் 100-120 டன் இருக்கும். இதில் 10% சுமார் 10டன்.
அதாவது 10 டன் அளவுக்கு நுண்ணுயிர்கள் ஒரு ஏக்கரில் இருக்க வேண்டும். இதைதான் வளமான மண் என்பது உண்மை.
இந்த நுண்ணுயிர்கள் செடியின் வேர்பகுதியை சுற்றியே வாழ்கின்றன.
வேர்பகுதியில் சுரக்கும் சக்கரை இதற்கு உணவாகிறது. அதை உண்ணவே வேர்பகுதியில் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. பிரதியுபகாரமாக இவை மண்ணில் இருக்கும் மக்கை வேருக்கு தேவையான உணவாக மாற்றி கொடுக்கிறது. ஆக நாம் செய்யவேண்டியது நுண்ணுயிர்களை பெருக்கவேண்டும். மண்ணில் மக்கு நிலைபெற வேண்டும். மற்றது தொடர்ந்து இயல்பாகவே நடக்கும்.
இந்த நுண்ணுயிர்களை பெருக்குவது பற்றி அடுத்த பதிவில் தொடருவோம்


FB/சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி

Comments

Popular Posts