பல பயிர் விதைப்பு :


பல பயிர் விதைப்பு :
:::::::::::::::::::::::::::::
கரிமச்சத்து 2.5% உள்ள மண்ணே உயிருள்ள மண். இப்போது தமிழகத்தில் விவசாய நிலங்களின் சராசரி கரிமச்சத்து 0.5%. இந்த குறைபாடு நீங்க பசுந்தாள் உரப்பயிர்கள் உதவுகின்றன. பல பயிர்களை ஒரே சமயத்தில் விதைத்து வளர்த்து மண்ணில் கலந்து விடுவது ஒருமுறை.
இது மண்ணுக்குள் எல்லா சத்துக்களையும் குவிக்கும் முறை.
பேருட்டச்சத்துக்கள் ,
நுண்ணூட்டச் சத்துக்கள் அனைத்தையும் கொடுத்து மண்வளத்தை கூட்டும்.
குறிப்பிடப்படுவது அனைத்தும் ஒரு ஏக்கருக்கு தேவையானது.
1)தவசம் (தானியம்) வகையில் எதேனும் நான்கு:
அ. சோளம்........1கிலோ
ஆ. கம்பு.............1கிலோ
இ. திணை..........1/4கிலோ
ஈ. சாமை.............1/4கிலோ
2) பயறுவகையில் நான்கு :
அ. உளுந்து.........1கிலோ
ஆ. பாசிபயறு .......1கிலோ
இ. தட்டைபயறு....1கிலோ
ஈ. கொண்டைகடலை 1கிலோ
3)எண்ணெய்வித்துகள் நான்கு:
அ. எள் .................1/2கிலோ
ஆ. நிலக்கடலை ..2கிலோ
இ. சூரியகாந்தி ....2கிலோ
ஈ. ஆமணக்கு........2கிலோ
4)பசுந்தாள் பயிர் நான்கு :
அ. தக்கைபூண்டு...2கிலோ
ஆ. சணப்பு ...........2கிலோ
இ. நரிபயறு...........1/2கிலோ
ஈ. கொள்ளு..........1கிலோ
5)மணப்பயிர் நான்கு:
அ. கடுகு ..............1/2கிலோ
ஆ. வெந்தயம் ......1/4கிலோ
இ. சீரகம் ............1/4கிலோ
ஈ. கொத்துமல்லி .1கிலோ

இவைகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் வயலில் விதைப்பு செய்து வளர்க்க வேண்டும். 45 நாட்கள் கழித்து மடக்கி உழுதுவிடுங்கள். (ஜீவாமிர்தம் கொடுப்பது தொடரட்டும் )
இரண்டு வாரம் அவைகளை மக்கவிடுங்கள்.
இப்போது உங்கள் நிலம் வளமுள்ளதாக தேறியிருக்கும். அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கும்.
பேருட்டச்சத்துக்கள் , நுண்ணூட்டச் சத்துக்கள், நுண்ணுயிர்,  பயிர் ஊக்கிகள் அனைத்தும் நிறைவாக இருக்கும்.
மண்புழுக்கள் தாண்டவமாடும்.
இப்போது நீங்கள் விரும்பும் , அதுதாங்க, இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கலாம்.
பயிர் பாதுகாப்பு அதுவாகவே நடக்கும்.
இப்படி செய்து பாருங்கள். உங்கள் நிலையும் செழிக்கும்.

Comments

Popular Posts