மோன்சண்டோ நிறுவனம்



 மோன்சண்டோ  நிறுவனம் தயாரிக்கும் விதைகளுக்கு காப்புரிமை பெறுகின்றது . இது தனது தயாரிப்புகளுக்கு  விலை நிர்ணயம் செய்து விற்க எதுவாகவும் மற்றும் விதைகளை மேம்படுத்த செய்யப்படும் முதலீட்டு செலவினங்களை  திரும்ப மீட்டவும் காப்புரிமை பெறுவதாய் தனது செய்தி குறிப்பில் சொல்லி உள்ளது.
மேற்சொன்ன அடிப்படை காரணிகளே காப்புரிமை பெறவேண்டிய அவசியமாகின்றது என தெரிவித்துள்ளது .
மேலும்  காப்புரிமை புதுமைப்படுதுதலை ஊக்குவிக்கின்றது . தினம் தோறும் தனது  ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் பணிக்காக  2.6 மில்லியன் டாலர்களை ( அதாவது நம் இந்திய பணமதிப்பின்படி 1570 இலட்சங்கள் ) சிலவிடுவதாகவும் ,அந்த செலவினம் விவசாயிகளையும் நுகர்வோரையும் இறுதி கட்டத்தில்  பயன் அடைய செய்வதாய் கூறுகின்றது .
காப்புரிமை சட்டத்தின் பாதுகாப்பு இல்லையெனில் இது சாத்தியமாகாது என அச்செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது .
 விவசாயிகள் காப்புரிமை செய்யப்பட்ட விதை இனங்களை வாங்கும்போது அவர்கள் அவ்விதைகளை ச்கரித்து வைக்கவோ  அல்லது தங்களின் விளைச்சலில் இருந்து  விதைகளை எடுத்து மறுமுறை விளைவிக்க மாட்டோம் என ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டே விதைகளை  வாங்குகின்றனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் முறைதனை மற்ற விதை நிருவனகளும் கடைபிடிக்கின்றன .வியாபாரம் செய்யப்படும் பொருளுக்குண்டான  பண  மதிப்பினை அறிந்து அதனை தர வேண்டும் என்ற புரிதல் உணர்வு இந்த ஒப்பந்தம் என்பதினை பெரும்பாலான விவசாயிகள்  உணர்ந்துள்ளனர் என்றும் தங்களது விவசாய சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புக்களுக்கு மதிப்பும் ஆதரவும் அளிக்கின்றனர் .  விவசாயிகளில் சிலர் பணம் கொடுத்து விதை வாங்குவதை எதிர்ப்பதை ஞாயம் என்றும் சொல்வதில் . ( இது மோன்சண்டோ  தனது வாடிக்கையாளர்களை பற்றி சொல்லும் கருத்து )

 பெரும்பாலான வழக்குகள்  தங்கள் காப்புரிமை  மற்றும் ஒப்பந்தங்களை மீறப்படும்போது தான் விவசாயிகளின் மீது வழக்கு தொடுக்கபடுகின்றது.வழக்குகள் சில  தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துகொள்ளபடுகின்றது .

வழக்குகளின் தீர்ப்பிற்க்கு  ஏற்ப தாங்கள் பெரும் நட்ட ஈடு தொகைதனை இளைஞர்களின் தலைமை ஏற்கும் பண்புகளை வளர்க்கும் திட்டங்களுக்கும்  மற்றும் படிப்புதவித் தொகை ஆக  மீண்டும் தரப்படுகின்றது .

மூறு முக்கிய காரணிகள் :
1)எந்த ஒரு வியாபாரமும்  தன பொருட்களுக்கு உண்டான பண மதிப்பினை பெற இயலவில்லை எனில் அந்த வியாபாரம் நசிந்துபோகும்.
2)ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் . புதிய ரகங்களை அறிமுகப்படுத்துதல்  ஆகிய மூன்றும்  ஒரு நிறுவனத்தின் தொடர் வருவாய் மூலமே சாதிக்க இயலும்.
3) பணத்தை கொடுத்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு  எங்கள் விதைகளை உபயோகிபவர்களின் நலனையும்  காக்க வேண்டும் .   பணம் கொடுக்காமல் எங்கள் விதைகளை  உபயோகித்து பயன் அடைபவர்களின் மீது  தான் வழக்கு போடபடுகின்றது.

விவசாயமும் ஒரு போட்டி நிறைந்த தொழிலே . இதில் அனைவர்க்கும்   சம பங்குண்டு.


இதனை படிக்கும் நண்பர்கள் தங்களின் மேலான கருத்துகளை பதிவிடுங்கள்.









.

Comments

Popular Posts